மும்பை இண்டியன்ஸ் Vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – வெற்றி யார் பக்கம்? #IPL

 

மும்பை இண்டியன்ஸ் Vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – வெற்றி யார் பக்கம்? #IPL

ஐபிஎல் 2020  திருவிழா ஒவ்வொரு நாளும் உற்சாகமாகவும் விறுவிறுப்பாகவும் சென்றுகொண்டிருக்கிறது.  முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை ராயுடுவின் அதிரடி ஆட்டத்தால் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.

டெல்லி கேபிட்டல்ஸூம் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதிய இரண்டாம் போட்டி இன்னும் பரபரப்பானது. இரு அணிகளின் ஸ்கோரும் சமனாக சூப்பர் ஓவரில் டெல்லி வென்றது.

மும்பை இண்டியன்ஸ் Vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – வெற்றி யார் பக்கம்? #IPL

மூன்றாம் போட்டியில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொண்டது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.  டி வில்லியர்ஸ் பேட்டிங், சோஹலின் பவுலிங்கால் பெங்களூரு அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நான்காம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு மோதியது ராஜஸ்தான் ராயல் அணி. இதில் 16 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை ராஜஸ்தான் பெற்றது.

மும்பை இண்டியன்ஸ் Vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – வெற்றி யார் பக்கம்? #IPL

இன்று மும்பை இண்டியன்ஸ் அணியோடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி யார் பக்கம்?

தமிழ்நாட்டின் தினேஷ் கார்த்திக் கேப்டனாகக் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உற்சாகமாகக் களம் இறங்குகிறது. ரஸல் எனும் ரன் மிஷின் இருப்பது இந்த அணியில்தான். அவருக்குக் கைகோர்க்க மோர்கன், தினேஷ் கார்த்திக், ராகுல் திரிப்தி எனக் காத்திருக்கிறார்கள். பவுலிங் தரப்பில் சுனில் நரேன் எனும் பேராயுதம் இந்த அணியில் பந்தை சுழல வைக்க காத்திருக்கிறது. அவருடன் கிரிஸ் கிரீன், அலிகான் உள்ளிட்டோர் தாக்குதலை நடத்தக் காத்திருக்கிறார்கள்.

மும்பை இண்டியன்ஸ் Vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – வெற்றி யார் பக்கம்? #IPL

கொல்கத்தாவை எதிர்க்கும் மும்பை இண்டியன்ஸ் பலம் வாய்ந்தது என்று தனியே சொல்ல வேண்டியதில்லை. சென்ற ஆண்டின் ஐபிஎல் சாம்பியன் மும்பை. ரோஹித் ஷர்மா தலைமையில் சூர்யகுமார் யாதவ், பொலார்ட்,டி காக், ஹிர்திக் பாண்டியா எனப் பெரும் பட்டாளமே இருக்கிறது. பவுலிங்கில் மும்பையின் பேராயுதம் பும்ரா. ஆனால், அவர் பந்து வீச்சில் முழு ஃபார்மில் இல்லை என்பது கவலை அளிப்பது. மீண்டு வருவார் என்றே நம்பலாம்.

மும்பை இண்டியன்ஸ் Vs கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – வெற்றி யார் பக்கம்? #IPL

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு தோற்ற மும்பை இண்டியன்ஸ் இன்று கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற வெறியோடு ஆடும் என்பதால், வெற்றி மும்பை பக்கம் செல்லவே வாய்ப்பு இருக்கிறது. நேற்று ராஜஸ்தானில் டிபிளஸியும் ஆர்ச்சரும் காட்டிய மேஜிக் போல கொல்கத்தாவில் நடந்தால் வெற்றியை கைப்பற்றி விடும்.