#IPL2021 : ராயுடு, டு பிளசிஸ் அசத்தலால் மும்பைக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த சென்னை

 

#IPL2021 : ராயுடு, டு பிளசிஸ் அசத்தலால் மும்பைக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த சென்னை

ஐ.பி.எல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஐ.பி.எல். போட்டியில் சிறந்த இரு அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். மும்பை அணியில் இரு மாற்றமாக கவுண்டர்ல் நைல்,ஜெயந்த் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு ஜிம்மி நீசம்,தவால் குல்கர்னி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

Image

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பாப் டு ப்ளஸிஸ் இறங்கினர்.கெய்க்வாட் 4 ரன்களில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின் வந்த மொயின் அலி , டு ப்ளஸிஸ் உடன் சேர்ந்து அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடிய மொயின் அலி 33 பந்துகளில் 5 சிக்ஸர்கள் விளாசி அரைசதம் கடந்தார். சிறப்பாக ஆடிய மொயின் அலி 36 பந்துகளில் 58 ரன்கள் குவித்து பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Image

தொடர்ந்து அசத்திய டு ப்ளஸிஸ் 27 பந்துகளில் அரைசதம் கடந்து அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தத் தொடரில் டு ப்ளஸிஸ் தொடர்ந்து அடித்த 4வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின் அம்பத்தி ராயுடு மற்றும் ஜடேஜா ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ஆடிய ராயுடு 20 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார். மும்பை அணியின் பிரதான பந்துவீச்சாளர்களான பும்ரா,போல்ட்,ராகுல் சாஹர் ஆகிய 3 பேரின் பந்து வீச்சையும் அடித்து துவம்சம் செய்தார் ராயுடு. 20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தது. ராயுடு இறுதி வரைக்கும் ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 78 ரன்கள் குவித்தார்.