Home விளையாட்டு #IPL2021: மும்பைக்கு 2வது வெற்றி; ஐதராபாத்துக்கு 3வது தோல்வி

#IPL2021: மும்பைக்கு 2வது வெற்றி; ஐதராபாத்துக்கு 3வது தோல்வி

நடப்பு ஐபிஎல் தொடரின் 9வது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இதில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.

#IPL2021: மும்பைக்கு 2வது வெற்றி; ஐதராபாத்துக்கு 3வது தோல்வி

இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் இரு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும் ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. சன்ரைசர்ஸ் அணி இதுவரை தான் விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

Image

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் களமிறங்கினர்.
பவர்பிளேவில் அதிரடியாக ஆடிய மும்பை அணி 53 ரன்களை திரட்டியது. அதன்பின் ரோஹித் சர்மா 32 ரன்களிலும்,சூர்யகுமார் யாதவ் 10 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடி வந்த குயின்டன் டி காக் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பொல்லார்டு 35 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்,இதில் கடைசி 2 பந்துகளில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை குவித்தது.

Image

151 என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் பேர்ஸ்டாவ் களமிறங்கினர். பவர்பிளேவில் அதிரடியாக ஆடிய ஐதராபாத்தில் 57 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பேர்ஸ்டோவ் 22 பந்துகளில் 4 சிக்சர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் குவித்து ‘ஹிட் விக்கெட்’ முறையில் ஆட்டமிழந்தார். இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து மணிஷ் பண்டே 2 ரன்களிலும் வார்னர் 36 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த இளம் வீரர்களான விராட் சிங்,அபிஷேக் வர்மா ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க போட்டியில் பதற்றம் தொற்றிக்கொண்டது.

கடைசி 5 ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒருநாள் பாண்டியாவின் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை அடித்து அசத்தினார் விஜய் சங்கர். ஆட்டத்தின் 19வது ஓவரில் பும்ரா பந்துவீச்சில் விஜய்சங்கர் 28 ரன்களில் ஆட்டமிழக்க ஐதராபாத் அணியின் நம்பிக்கையும் தகர்ந்தது.19.4 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இத் தொடரில் மும்பை அணி பெற்ற இரண்டாவது வெற்றியாகும் இதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது மும்பை அணி. தோல்வியடைந்த ஐதராபாத் அணி தொடர்ச்சியாக சந்தித்த மூன்றாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

#IPL2021: மும்பைக்கு 2வது வெற்றி; ஐதராபாத்துக்கு 3வது தோல்வி
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

மன் கி பாத் நிகழ்ச்சியில்.. குன்னூர் பெண்மணியை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி!

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவது வழக்கம். அதன் படி, இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று...

கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம்..திருமாவளவன் முழக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்11.8.1962ல் அங்கனூரில் பிறந்தவர். இவரது பிறந்தநாளினை முன்னிட்டு தமிழக முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகின்றன. மேலும், பொன்விழா மாநாடும்...

இன்னும் ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வாங்கவில்லையா?… உங்களுக்கான முக்கிய அறிவிப்பு இதோ!

கொரோனா நிவாரண நிதியை பெறாதவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை...

ஒலிம்பிக்ஸில் 21 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை நிகழ்த்திய மீரா பாய்… இன்ப அதிர்ச்சி கொடுத்த மணிப்பூர் முதல்வர்!

சர்வதேச தொடரில் மிகவும் பிரமாண்டமான மதிப்புமிக்க தொடராக ஒலிம்பிக்ஸ் பார்க்கப்படுகிறது. எந்தவொரு நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும் ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே அவர்களின் லட்சியமாக இருக்கும். வெள்ளிப் பதக்கத்தையாவது நிச்சயம் பெற்றுவிட...
- Advertisment -
TopTamilNews