5 ஸ்டார் ஹோட்டல்கள் கொரோனா மையங்களாக மாற்றம் – மும்பை கார்ப்பரேஷன் அதிரடி!

5 ஸ்டார் ஹோட்டல்கள் கொரோனா மையங்களாக மாற்றம் – மும்பை கார்ப்பரேஷன் அதிரடி!

கொரோனா தொற்று மக்களின் அன்றாட வாழ்க்கையோடு வாழ்க்கையாக இயைந்துவிட்டது. இதனால் நினைத்துப் பார்க்க முடியாத பல்வேறு மாற்றங்கள் நம் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியா மருத்துவக் கட்டமைப்பில் தன்னிறைவு பெறாத நாடாகவே இருக்கிறது. அதற்கு மக்கள் தொகையும் ஒரு காரணமாகும். அப்படி கூறி தப்பிக்கவும் முடியாது. மக்கள் தொகை அதிகமாக இருந்தால் அவர்கள் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாயும் அதிகம் தானே. அதைக் கொண்டு மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கியிருக்கலாமே.

5 ஸ்டார் ஹோட்டல்கள் கொரோனா மையங்களாக மாற்றம் – மும்பை கார்ப்பரேஷன் அதிரடி!
5 ஸ்டார் ஹோட்டல்கள் கொரோனா மையங்களாக மாற்றம் – மும்பை கார்ப்பரேஷன் அதிரடி!

அதிகரித்து வரும் நோயாளிகளுக்கான படுக்கை வசதி போதாமை சொல்லிவிடும் இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பின் கள நிலவரத்தை. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொய்வடைந்ததும் இதனால் தான். ஆரம்பத்தில் பள்ளிகள், கல்லூரிகள், ரயில் பெட்டிகள் ஆகியவை கொரோனா சிகிச்சை மையங்களாக உருமாற்றம் அடைந்தன. தற்போது நாம் கற்பனை கூட செய்து பார்த்திராத ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம் பெற்றுள்ளன.

நாட்டில் பதிவாகும் மொத்த கொரோனா பாதிப்புகளில் 25% மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் பதிவாகின்றன. உயிரிழப்புகளின் நிலவரமும் அதுவே. குறிப்பாக மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் மும்பை மாநகரத்தில் கொரோனாவின் கோர தாண்டவத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு மாநகராட்சியால் ஈடுகொடுக்க முடியவில்லை. கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, படுக்கை வசதி இல்லாதது, ஆக்ஸிஹன் பற்றாக்குறை என மருத்துவக் கட்டமைப்பு ஆட்டம் கண்டுள்ளது.

5 ஸ்டார் ஹோட்டல்கள் கொரோனா மையங்களாக மாற்றம் – மும்பை கார்ப்பரேஷன் அதிரடி!

இச்சூழலில் தான் மும்பையிலுள்ள மிகப்பெரிய இரண்டு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம் செய்துள்ளது மும்பை மாநகராட்சி நிர்வாகம். இந்த இரு ஹோட்டல்களும் தனியார் மருத்துவமனைகளின் கட்டுப்பாட்டில் விடப்பட்டுள்ளன. இங்கு மிகவும் லேசான அறிகுறிகளுடன் இருக்கும் நோயாளிகள் அனுமதிக்கபடுவார்கள். சிகிச்சை பெற ரூ.4 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும்.

5 ஸ்டார் ஹோட்டல்கள் கொரோனா மையங்களாக மாற்றம் – மும்பை கார்ப்பரேஷன் அதிரடி!

இதில் உணவு, தங்குமிடம் அனைத்தும் அடங்கும். மருந்துகள், மாத்திரைகள் உள்ளிட்ட செலவுகள் தனியாகக் கணக்கிடப்படும். ஒரு குடும்பத்தில் இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால், ரூ.6 ஆயிரம் மதிப்பில் இருவர் தங்கும் அறைகளை எடுக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இன்றிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காகச் சேரலாம்.