பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

பார்ச்சூன் மேகசின் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த வகையில் 2020ம் ஆண்டுக்கான பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. நிறுவனங்களின் மொத்த வருவாய் அடிப்படையில் நிறுவனங்களை வரிசை படுத்தியுள்ளதாக பார்ச்சூன் தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் 10 இடங்கள் முன்னேறி 96வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 106வது இடத்தில் இருந்தது.

பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் முதல் 100 நிறுவனங்களில் இடம் பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 17 ஆண்டுகளாக பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இடம் பிடித்து வருகிறது. பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் தவிர, இந்தியன் ஆயில், ஓ.என்.ஜி.சி., பாரத ஸ்டேட் வங்கி, பாரத் பெட்ரோலியம், டாடா மோட்டார்ஸ் மற்றும் ராஜேஸ் எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய 6 நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.

பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து சீனாவின் அரசு நிறுவனங்களான சினோபெக் குழுமம், ஸ்டேட் கிரிட் மற்றும் சீன நேஷனல் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை முறையே 2,3 மற்றும் 4வது இடங்களில் உள்ளன. 5வது இடத்தில் ராயல் டச் ஷெல் நிறுவனம் உள்ளது. பார்ச்சூன் 500 நிறுவனங்கள் பட்டியலில் முதல் 100 நிறுவனங்களில் சீனாவை சேர்ந்த 24 நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.