இந்தியில் கடிதம் : ஆத்திரத்தில் திருப்பி அனுப்பிய எம்.பி சு.வெங்கடேசன்!

 

இந்தியில் கடிதம் : ஆத்திரத்தில் திருப்பி அனுப்பிய எம்.பி சு.வெங்கடேசன்!

மத்திய அமைச்சகத்திடம் இருந்து இந்தியில் வந்த கடிதத்தை மதுரை எம்.பி சு.வெங்கடேசன் அமைச்சருக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார். இதற்கு தனது கண்டனத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

இந்தியில் கடிதம் : ஆத்திரத்தில் திருப்பி அனுப்பிய எம்.பி சு.வெங்கடேசன்!

இது தொடர்பாக அவர் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் , “மத்திய அமைச்சகத்திடம் இருந்து இந்தியில் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடித எண்ணை மட்டும் தான் தெரிந்து கொள்ள முடிந்தது. உள்ளடக்கம் என்னவென்பதைப் புரியவில்லை. தமிழ்நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தொடர்புகள் இந்தியில் அமையக் கூடாது. அவ்வாறு அமைவது அலுவல் மொழி சட்டத்திற்கும், அரசு பல்வேறு தேதிகளில் வெளியிட்டுள்ள ஆணைகளுக்கு புறம்பானது என்பதை மீண்டும் மீண்டும் பதிவு செய்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளேன். நான் இப்பிரச்சனையில் உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கூட அணுகினேன். அந்த வழக்கில் மத்திய அரசு வருத்தம் தெரிவித்ததோடு, தகவல் தொடர்புகள் ஆங்கிலத்தில் அமையும் என உறுதி அளித்தது.

இந்தியில் கடிதம் : ஆத்திரத்தில் திருப்பி அனுப்பிய எம்.பி சு.வெங்கடேசன்!

மத்திய அரசின் இத்தகைய அணுகுமுறை திட்டமிடப்பட்டது என்று சமஸ்கிருதத்தையும் இந்தியையும் இந்தி பேசாத மாநிலங்கள் குறிப்பாக தமிழக மக்கள் மீது திணிப்பதற்கு விரித்த திட்டத்தின் பகுதியோ என்று, இப்படியே தொடர்ந்து செய்தால் இந்தி பேசாத மாநிலங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் களைத்துப்போய் எதிர்க்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள் என்று மத்திய அரசு நினைக்கக்கூடும்.

ஆனால் நான் அழுத்தமாக ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன். எங்கள் தமிழ்நாடு இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு எதிராக உறுதியாக போராடிய பல தியாகங்களையும் புரிந்த தனித்துவமிக்க வரலாற்றைக் கொண்டது. ஆகவே நாங்கள் களைத்துப் போய் விட மாட்டோம். எங்கள் அடையாளத்தை பெருமைமிகு கலாச்சாரத்தை பலவீனமுறச் செய்யும் நடவடிக்கைகளை உறுதியாக எதிர்த்து முறியடிப்போம். ஆகவே உங்கள் இந்தி கடிதத்தை உங்களுக்கு திருப்பி அனுப்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.