“நாம் அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்” எம்.பி. சு.வெங்கடேசன் எச்சரிக்கை!

 

“நாம் அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்” எம்.பி. சு.வெங்கடேசன் எச்சரிக்கை!

இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3,60,960 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதேபோல் ஒரே நாளில் கொரோனாவுக்கு 3293 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 13ஆயிரத்து 502ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனாவால் இதுவரை 13,728 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

“நாம் அபாய கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்” எம்.பி. சு.வெங்கடேசன் எச்சரிக்கை!

இதனால் கொரோனா குறித்து விழிப்புணர்வு தகவல்களையும், அதிருப்தியையும் தமிழக எம்.பிக்கள் சிலர் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தின் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி திறன் 400 மெட்ரிக் டன்.ஏப்ரல் மாத மத்தியில் நமது மருத்துவ பயண்பாட்டிற்கான ஆக்சிஜன் தேவை 240 மெட்ரிக் டன்னாக இருந்தது.ஆனால், கடந்த சில நாட்களாக நமது பயன்பாடு 350 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. தமிழக அரசே,விரைந்து நடவடிக்கைகளில் இறங்கு” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் கரூர் எம்.பி. ஜோதிமணி , “18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பு மருந்து முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு துவங்க இருக்கிறது. தேவைப்படுவோர் கீழ்க்கண்ட இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தடுப்பூசி அவசியம். அத்துடன் முக கவசம்,சமூக இடைவெளி ,வாய்ப்புள்ளோர் வீட்டிலிருத்தல் முக்கியம்” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், பாஜக போன ஆட்சிக்கும் இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? போன ஆட்சியில் க்யூல நின்னு செத்தாங்க, இந்த ஆட்சியில் செத்தவங்க க்யூல நிக்கிறாங்க என்ற புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.