கார்த்தி சிதம்பரம் வீட்டில் காரைக்குடி உணவை ரசித்து ருசித்து சாப்பிட்ட கனிமொழி

 

கார்த்தி சிதம்பரம் வீட்டில் காரைக்குடி உணவை ரசித்து ருசித்து சாப்பிட்ட கனிமொழி

கார்த்தி சிதம்பரம் வீட்டில் எம்.பி. கனிமொழி உணவருந்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கார்த்தி சிதம்பரம் வீட்டில் காரைக்குடி உணவை ரசித்து ருசித்து சாப்பிட்ட கனிமொழி

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, எம்.பி. தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.மாங்குடி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பெரியகருப்பன், சிவகங்கை சட்டமன்றத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் குணசேகரன் உள்ளிட்டோரை ஆதரித்து திமுக எம்.பி.கனிமொழி பரப்புரை மேற்கொண்டார். பின்னர் சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம் வீட்டுக்கு சென்ற கனிமொழி காரைக்குடி உணவை ரசித்து, ருசித்து சாப்பிட்டார். இதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.