வீடியோ விவகாரம்.. விளம்பரத்துக்கான பசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது.. ம.பி. முதல்வரை தாக்கிய காங்கிரஸ்

வீடியோ விவகாரம்.. விளம்பரத்துக்கான பசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது.. ம.பி. முதல்வரை தாக்கிய காங்கிரஸ்

மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். போபாலில் உள்ள சிராயு மருத்துவமனையில் கொரோனாவுக்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவமனை அறையில் நேற்று சிவ்ராஜ் சவுகான் பிரதமர் மோடியின் மனதிலிருந்து பேசுகிறேன் நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டு இருக்கும் வீடியோவை தனது டிவிட்டரில் போஸ்ட் செய்து இருந்தார்.

வீடியோ விவகாரம்.. விளம்பரத்துக்கான பசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது.. ம.பி. முதல்வரை தாக்கிய காங்கிரஸ்

தற்போது இந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கே.கே. மிஸ்ரா டிவிட்டரில் சிவ்ராஜ் சிங் சவுகானை கடுமையாக சாடியுள்ளார். கே.கே. மிஸ்ரா டிவிட்டரில், மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயாளிகளை சந்திக்க அனுமதி கிடையாது. முதல்வரின் வீடியோவை படம் பிடித்தது யார்? விளம்பரத்துக்கான பசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது. எனவே பேரழிவில் வாய்ப்பை தேடாதீர்கள் என பதிவு செய்து இருந்தார்.

வீடியோ விவகாரம்.. விளம்பரத்துக்கான பசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்காது.. ம.பி. முதல்வரை தாக்கிய காங்கிரஸ்

நேற்று முன்தினம் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தனக்கு கொரோனா தொற்று உறுதியாக இருப்பது தெரிந்தவுடன் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், எனக்கு கடந்த சில தினங்களாக கொரோனாவுக்கான அறிகுறிகள் இருந்ததால் உடனடியாக பரிசோதனை மேற்கொண்டேன். எனது கொரோனா வைரஸ் பரிசோதனை அறிக்கைகள் பாசிட்டிவ்வாக வந்துள்ளது. எனக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளன.
என்னுடன் தொடர்பு கொண்ட சக ஊழியர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். என்னும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். டாக்டர்களின் அறிவுறுத்தல்படி, அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுகிறேன், என்னை தனிமைப்படுத்தி உள்ளேன் என பதிவு செய்து இருந்தார். காங்கிரஸ் தலைவர்கள் கமல் நாத் மற்றும் திக்விஜய சிங் ஆகியோர் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் விரைவில் குணமடைய வேண்டும் என டிவிட்டரில் பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.