காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது…. மத்திய பிரதேச முதல்வர் கணிப்பு…

காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது…. மத்திய பிரதேச முதல்வர் கணிப்பு…

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தின்போது கட்சிக்குள் உள்ள கிளர்ச்சி வெளிப்படையாக வெடித்ததாக தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது மத்திய பிரதேச பா.ஜ.க. முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது…. மத்திய பிரதேச முதல்வர் கணிப்பு…
கபில் சிபல்

ஜோதிராதித்ய சந்தியா கேள்வி கேட்டபோது, பா.ஜ.க.வுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்கள். தற்போது குலாம் நபி ஆசாத் மற்றும் கபில் சிபல் போன்ற தலைவர்கள் கட்சிக்கு முழு நேர தலைவர் வேண்டும் கோரிக்கை விடுக்கின்றனர், அவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததாக குற்றம் சாட்டப்படுகிறார்கள். இது போன்ற கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது…. மத்திய பிரதேச முதல்வர் கணிப்பு…
உமா பாரதி

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான உமா பாரதி கூறுகையில், காந்தி-நேரு குடும்பத்தின் இருப்பு நெருக்கடியில் உள்ளது,? அவர்களின் அரசியல் ஆதிக்கம் முடிந்து விட்டது, காங்கிரஸ் முடிந்தது. ஆகையால் யார் இப்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்லை. காங்கிரஸ் எந்தவொரு வெளிநாட்டு கூறுகளும் இல்லாமல் உண்மையான சுதேசி காந்திக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்தார்.