”23ம் தேதி மோட்டோ இ7 பிளஸ் போன் அறிமுகம்”-பிளிப்கார்டில் அறிமுகப்படுத்தும் மோட்டோரோலா !

 

”23ம் தேதி மோட்டோ இ7 பிளஸ் போன் அறிமுகம்”-பிளிப்கார்டில் அறிமுகப்படுத்தும் மோட்டோரோலா !

வரும் 23ம் தேதியன்று இந்தியாவில் மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போனை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

”23ம் தேதி மோட்டோ இ7 பிளஸ் போன் அறிமுகம்”-பிளிப்கார்டில் அறிமுகப்படுத்தும் மோட்டோரோலா !

ஏற்கனவே பிரேசில் நாட்டில் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், பிளிப்கார்டில் வரும் 23ம் தேதி மோட்டோ இ7 பிளஸ் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் திரை, ஸ்நாப்டிராகன் 460 பிராசசர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, எஸ்டி கார்டு இணைக்கும் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜர் என பலதரப்பட்ட வசதிகளுடன் வருகிறது.

”23ம் தேதி மோட்டோ இ7 பிளஸ் போன் அறிமுகம்”-பிளிப்கார்டில் அறிமுகப்படுத்தும் மோட்டோரோலா !

ஆண்டிராய்ட் 10 இயங்குதளத்தில் இயங்கும் இந்த போனின் கேமராவை பொறுத்தவரை பின்புறத்தில் 48 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கேமராவும், முன்புறத்தில் 8 மெகா பிக்சல் செல்பி கேமராவும் கொண்டு வெளியாக உள்ளது. இதன் விலை குறித்த எந்த விபரமும் தெரியவில்லை என்றாலும் பிரேசிலில் இதன் விலை இந்திய மதிப்பில் 18 ஆயிரத்து 700 என்பது குறிப்பிடத்தக்கது.

-எஸ். முத்துக்குமார்