பெற்ற குழந்தையை ரூ 20-க்கு ஏலம் விடும் தாய்மார்கள் – தமிழகத்தில் விசித்திர கோவில்

பெற்ற குழந்தையை ரூ 20-க்கு ஏலம் விடும் தாய்மார்கள் – தமிழகத்தில் விசித்திர கோவில்

தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலில் தான் பெற்றெடுத்த குழந்தையை ரூ 20-க்கு ஏலம் விடும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே 15 கி.மீ தொலைவில் உள்ளது நயினார் கோயில். இங்குள்ள கோவிலில் நாகநாதர் மற்றும் சவுந்தரநாயகி அம்மன் முக்கிய தெய்வங்களாக காட்சியளிக்கின்றனர். இந்த கோவிலில் பக்தர்கள் ஒரு விசித்திரமான வேண்டுதல் செய்கின்றனர்.அதாவது பிறந்தது

பெற்ற குழந்தையை ரூ 20-க்கு ஏலம் விடும் தாய்மார்கள் – தமிழகத்தில் விசித்திர கோவில்

முதலே ஏதாவது நோய் தக்கப்பட்டு அந்த நோயைக் குணப்படுத்த முடியாமல் போனால் குழந்தையை தூக்கிக் கொண்டு இந்தக் கோவிலுக்கு வருகிறார்கள்.
இங்கு நாகநாதர் சந்நதியில் உள்ள கொடிமரத்திற்கு அருகே குழந்தையை படுக்க வைக்கிறார்கள். அந்தக் குழந்தையை கோவில் காவலர் ஏலம் விடுகிறார். ஒரு ரூபாயில் ஆரம்பித்து 20 ரூபாய் வரை ஏலம் விடப்படுகிறது ஏலத்தொகை 20 ரூபாயை நெருங்கினால் மற்றவர்கள் ஒதுங்கிவிடுவார்கள்.

பெற்ற குழந்தையை ரூ 20-க்கு ஏலம் விடும் தாய்மார்கள் – தமிழகத்தில் விசித்திர கோவில்

பெற்றோர் 20 ரூபாய் தந்து குழந்தையை மீண்டும் பெறுகிறார்கள். இந்த நிகழ்வை விற்று வாங்குதல் என்கிறார்கள்..அந்தக் குழந்தையை தாக்கியிருந்த நோய் அதன் பின்னர் குணமடைந்து விடுவதாகச் சொல்கிறார்கள்.
அதேபோல் இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உளுந்த வடை பிரசாதமாகத் தரப்படுகிறது என்பது வித்தியாசம்தான்.