காங்கிரஸ் – பா.ஜ.க-வுக்கு இடையே ரகசிய உறவு! – பினராயி விஜயன் தாக்கு

காங்கிரஸ் – பா.ஜ.க-வுக்கு இடையே ரகசிய உறவு! – பினராயி விஜயன் தாக்கு

காங்கிரஸ் – பா.ஜ.க-வுக்கு இடையே ரகசிய உறவு! – பினராயி விஜயன் தாக்கு
கேரள சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக பேசிய முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ், பா.ஜ.க, முஸ்லிம் லீக் இடையே ரகசிய உறவு உள்ளது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் – பா.ஜ.க-வுக்கு இடையே ரகசிய உறவு! – பினராயி விஜயன் தாக்கு

கேரள சட்டப் பேரவையில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் தோல்வியடைந்தது. இந்த விவாதத்தின் போது கேரள முதல்வர் பினராயி விஜயன் காங்கிரஸை மிகக் காட்டமாக விமர்சித்துப் பேசினார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் – பா.ஜ.க-வுக்கு இடையே ரகசிய உறவு! – பினராயி விஜயன் தாக்கு

பினராயி விஜயன் பேசும்போது, “இங்கே ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தது போன்று டெல்லியிலும் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் தலைமைப் பதவிப் பிரச்னை தீவிரமாக உள்ளது. ஒட்டுமொத்த முழுத் தலைமையையும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் கேட்கின்றனர். ஒரு தரப்பினரோ சோனியா காந்தி குடும்பத்தினர் தலைமை தாங்க வேண்டும் என்கின்றனர்.

காங்கிரஸ் – பா.ஜ.க-வுக்கு இடையே ரகசிய உறவு! – பினராயி விஜயன் தாக்கு

சொந்தமாக கட்சித் தலைவரைக் கூட தேர்வு செய்ய முடியாத நிலையில்தான் காங்கிரஸ் உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் பா.ஜ.க-வின் அழைப்புக்காக காத்திருக்கிறார்கள். ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் போதும் பா.ஜ.க-வில் இணையத் தயாராக உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்குள் உச்சக்கட்ட குழப்பம் உள்ளது. மூத்த தலைவர்கள் ஒருவருக்கொருவர் பா.ஜ.க ஏஜெண்ட் என்று விமர்சித்துக் கொள்கிறார்கள்.

காங்கிரஸ் – பா.ஜ.க-வுக்கு இடையே ரகசிய உறவு! – பினராயி விஜயன் தாக்கு

அயோத்தி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் ஒருவித நிலைப்பாடு எடுக்கின்றனர். மற்றொரு தரப்பினர் எதிர் நிலைப்பாட்டை எடுக்கின்றனர். இரட்டை நிலைப்பாட்டுக்குக் காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. மிகப் பரிதாபமான சூழ்நிலையில் உள்ள காங்கிரஸ் எங்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
மத்தியில் பல்வேறு மதச்சார்பற்ற அரசுகளை வீழ்த்த பா.ஜ.க-வுடன் காங்கிரஸ் கட்சியும் இணைந்து செயல்பட்டுள்ளது. மதச் சார்பின்மை மீதான சித்தாந்தத்தையும் அடையாளத்தையும் விட்டுவிட்டு பாரதிய ஜனதா கட்சியின் பி டீம் போல காங்கிரஸ் செயல்படுகிறது.
கேரளாவில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், பா.ஜ.க இடையே ரகசியமான உறவு உள்ளது. கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஒன்றாக ஒருதரப்பான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்கள்” என்றார்.