2021 டிசம்பருக்குள் சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை தொடும்… மார்கன் ஸ்டான்லி மறுமதிப்பீடு

2021 டிசம்பருக்குள் சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை தொடும்… மார்கன் ஸ்டான்லி மறுமதிப்பீடு

2021 டிசம்பருக்குள் சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை தொடும் என்று மார்கன் ஸ்டான்லி நிறுவனம் மறுமதிப்பீடு செய்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதே முதலீட்டு பேங்க் மற்றும் நிதி சேவை நிறுவனம் மார்கன் ஸ்டான்லி. இந்நிறுவனம் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, பங்குச் சந்தைகளின் வளர்ச்சி உள்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தனது கணிப்பை வெளியடுவது வாடிக்கை.

2021 டிசம்பருக்குள் சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை தொடும்… மார்கன் ஸ்டான்லி மறுமதிப்பீடு
சென்செக்ஸ்

அந்த வகையில் தற்போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இலக்கு தொடர்பான தனது கணிப்பை மறுமதிப்பீடு செய்து மார்கன் ஸ்டான்லி வெளியிட்டுள்ளது. 2021 டிசம்பருக்குள் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை எட்டி விடும் என்று மார்கன் ஸ்டான்லி மறுமதிப்பீடு செய்துள்ளது.

2021 டிசம்பருக்குள் சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை தொடும்… மார்கன் ஸ்டான்லி மறுமதிப்பீடு
பங்கு வர்த்தகம் ஏற்றம்

முன்னதாக மார்கன் ஸ்டான்லி நிறுவனம் 2021 ஜூன் மாதத்துக்குள் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 37,300 புள்ளிகளை எட்டும் என்று கணித்து இருந்தது. தற்போது பங்குச் சந்தை சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவதால் தனது முந்தைய கணிப்பை மறுமதிப்பீடு செய்துள்ளது. கடந்த சில வர்த்தக தினங்களாக இந்திய பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டு வருவது குறிப்பிடத்தக்கது.