1 கோடி பேர் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம்…. மொத்தம் ரூ.562 கோடி அபராதம் வசூலித்த ரயில்வே

1 கோடி பேர் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம்…. மொத்தம் ரூ.562 கோடி அபராதம் வசூலித்த ரயில்வே

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது தொடர்பான தகவல்களை மத்திய அரசிடம் கேட்டு இருந்தார். இதனையடுத்து மத்திய அரசு அந்த தகவல்களை அவருக்கு வழங்கியது. அந்த தகவல்களை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.

1 கோடி பேர் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம்…. மொத்தம் ரூ.562 கோடி அபராதம் வசூலித்த ரயில்வே
இந்தியன் ரயில்வே

அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2016 முதல் 2020ம் ஆண்டு வரை, ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களுக்கு அபராதம் விதித்து மொத்தம் ரூ1,938 கோடியை வருவாயாக ரயில்வே துறை ஈட்டியுள்ளது. கடந்த 2019-20ம் நிதியாண்டில் மட்டும் ரயில்களில் 1.10 கோடி பேர் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து மாட்டியுள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.561.73 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும்.

1 கோடி பேர் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம்…. மொத்தம் ரூ.562 கோடி அபராதம் வசூலித்த ரயில்வே
ரயில் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை

ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகை
ஆண்டு அபராதம் தொகை
2016-17 ரூ.405.30 கோடி
2017-18 ரூ.441.62 கோடி
2018-19 ரூ.530.06 கோடி
2019-20 ரூ.561.73 கோடி

1 கோடி பேர் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம்…. மொத்தம் ரூ.562 கோடி அபராதம் வசூலித்த ரயில்வே
ரயில்வே பாதுகாப்பு படை

ரயில்களில் ஒரு பயணி டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தால், டிக்கெட் கட்டணத்தோடு குறைந்தபட்சம் ரூ.250 அபாரதம் செலுத்த வேண்டும். அபராதத்தை செலுத்த மறுத்தால், சம்பந்தப்பட்ட நபர் ரயில்வே பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டு, ரயில்வே சட்டம் பிரிவு 137ன்கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்.