டெல்லியில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து – குழப்பத்தில் பயணிகள் அவதி

 

டெல்லியில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து – குழப்பத்தில் பயணிகள் அவதி

டெல்லி: டெல்லியில் 80-க்கும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று காலை இந்தியா முழுவதும் பல விமான நிலையங்களில் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கின. ஆனால் அதிக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் டெல்லி, மும்பை ஆகிய விமான நிலையங்களில் பயணிகள் இடையே குழப்பம் ஏற்பட்டது. விமான சேவை ரத்து தொடர்பாக விமான நிறுவனங்கள் தங்களுக்கு எந்த அறிவிப்பும் தரவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.

டெல்லியில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து – குழப்பத்தில் பயணிகள் அவதி

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 3-இல் பயணிகள் பயங்கர கோபத்துடன் காணப்பட்டனர். கடைசி நிமிடம் வரை தங்களுக்கு விமானம் ரத்து பற்றி தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர். டெல்லியில் இன்று 82 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட விமானங்களை இயக்க முடியாது என்று திடீரென பல மாநிலங்கள் மத்திய அரசிடம் கூறியதால் இவ்வாறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.