தினமும் 2 லட்சத்துக்கும் மேல் புதிய நோயாளிகள் – அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா

தினமும் 2 லட்சத்துக்கும் மேல் புதிய நோயாளிகள் – அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 85 லட்சத்து 68 ஆயிரத்து 681 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 74 லட்சத்து 62 ஆயிரத்து 805 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 15 லட்சத்து 63 ஆயிரத்து 133 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,95,42,743 பேர்.

தினமும் 2 லட்சத்துக்கும் மேல் புதிய நோயாளிகள் – அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா

அமெரிக்காவில் கொரோனா பரவல் என்பது தொடக்கம் முதலே அதிகரித்தே வருகிறது. கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது அமெரிக்காவில் 1,55,91,709 பேரோடு முதல் இடத்தில் உள்ளது.

நேற்று மட்டுமே, 2,08,121 புதிய நோயாளிகள் அதிகரித்துள்ளனர். நேற்று மட்டுமல்ல, பல நாட்களாக தினமும் இரண்டு லட்சம் பேருக்கு மேல் புதிய நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். முதல்முறையாக நவம்பர் 20- ம் தேதிதான் இரண்டு லட்சம் கொரோனா நோயாளிகளைக் கடந்தது அமெரிக்கா. அடுத்து டிசம்பர் 02, 03, 04, 05,07, 08 ஆகிய தேதிகளில் இரண்டு லட்சம் புதிய நோயாளிகள் அதிகரித்து உள்ளனர்.

தினமும் 2 லட்சத்துக்கும் மேல் புதிய நோயாளிகள் – அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா

நேற்று இறந்தவர்கள் எண்ணிக்கை 2,913 பேர். அமெரிக்காவில் இதுவரை 2,93,445 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

கலிபோர்னியா, டெக்ஸாஸ், ஃப்ளோரிடா, இல்லினோய்ஸ் ஆகிய மாகாணங்களே அதிக கொரோனா தொற்று உள்ளவை. ஆனால், 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோரைப் பலி கொடுத்து அதிக இழப்புகளைக் கொடுத்த மாகாணம் நியூ யார்க்தான்.