’மாதம் 60 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து’ ரஷ்யா இலக்கு

 

’மாதம் 60 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து’ ரஷ்யா இலக்கு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 35 லட்சத்து  84 ஆயிரத்து 259 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. இரு வாரங்களில் 35 லட்சம் அதிகரித்து விட்டது.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 60 லட்சத்து 82 ஆயிரத்து 104 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 12 ஆயிரத்து 517 பேர்.  

’மாதம் 60 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து’ ரஷ்யா இலக்கு

உலக நாடுகள் லாக்டெளன், தனிமைப்படுத்தல், தீவிர சிகிச்சை என எடுத்த அத்தனை முயற்சிகளும் ஓரளவுக்குத்தான் பலன் கொடுக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, தடுப்பு மருந்தே முழுமையான தீர்வு என்றாகி விட்டது. ரஷ்யா, உலகின் முதல் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துவிட்டது. அதை இம்மாதம் 12-ம் தேதி பதிவு செய்தும் விட்டது.

ஸ்புட்னிக் வி எனும் பெயரிட்டப்பட்டுள்ள ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியின் நம்பகத்தன்மையை உலகிற்கு பறைச்சாற்றம் தம் மகளுக்கே தடுப்பூசி போட்டிருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.

’மாதம் 60 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்து’ ரஷ்யா இலக்கு

ரஷ்யாவில் 40 ஆயிரம் பேருக்கு இந்த மருந்து பரிசோதனையாக அளிக்கப்பட விருக்கிறது. இதன் குறித்து அப்டேட் நியூஸ்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

ரஷ்யா, இந்த ஆண்டு முடிவதற்குள் 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. உலக நாடுகள் பலவும் ரஷ்யாவின் தடுப்பூசியைப் பெற ஒப்பந்தம் போட்டுள்ளன.

அடுத்த ஆண்டிலிருந்து மாதம் 60 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரிக்க ரஷ்யா முடிவெடுத்திருப்பதாக அந்நாட்டின்  தொழில்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.