ஆகஸ்டில் தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்… கேள்விகளோடு காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்…

ஆகஸ்டில் தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்… கேள்விகளோடு காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உறுதி செய்துள்ளார். மேலும் சபை நடவடிக்கைகளை நடத்துவது தொடர்பாக பல்வேறு வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். பெரும்பாலும் ஆகஸ்ட் 2வது அல்லது 3வது வாரத்தில் தொடங்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆகஸ்டில் தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்… கேள்விகளோடு காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்…
பிரகலாத் ஜோஷி

தற்போது கொரோனா வைரஸ் நெருக்கடி சூழ்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை நடவடிக்கைகளை எப்படி நடத்துவது என்பது அரசுக்கு பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதால், அவைகளில் உறுப்பினர்கள் இருக்கை மாற்றியமைக்க வேண்டியது பெரிய பிரச்சினையாக இருக்கும். இருப்பினும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறைக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்திற்கு பிறகுதான் இரு அவைகளின் செயல்பாடுகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஆகஸ்டில் தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்… கேள்விகளோடு காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்…
நாடாளுமன்ற அவை

எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள், கொரோனா வைரஸ் நிலவரம், இந்திய-சீன எல்லை பிரச்சினை மற்றும் பொருளாதார வீழ்ச்சி தொடர்பாக எதிர்க்கட்சிகள் அவைகளில் கண்டிப்பாக கேள்வி எழுப்பும். இதனால் எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே அனல் பறக்கும் விவாதங்களுக்கு பஞ்சம் இருக்காது