சென்னை ஈசிஆர் சாலையில் ரூ.2 கோடி பறிமுதல்

 

சென்னை ஈசிஆர் சாலையில் ரூ.2 கோடி பறிமுதல்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு பகுதிகளிலும் சோதனையில் ஈடுபடும் தேர்தல் பறக்கும் படை மற்றும் சிறப்பு குழுக்களைச் சேர்ந்தோர் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரும் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.

சென்னை ஈசிஆர் சாலையில் ரூ.2 கோடி பறிமுதல்
ரூ.2 ஆயிரம் நோட்டுகள்

இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் தேர்தல் பறக்கும்படை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசென்ற பணம் ரூ. 2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணத்தை ஏ.டி.எம்.களுக்கு நிரப்ப கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டது. வங்கிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் அனைவரும் ஏ.டி.எம்களை நம்பியே உள்ளனர். ஆனால் தேர்தல் பறக்கும் படையினர் இதனை ஏற்க மறுத்தனர். காரணம் ஏடிஎம்களுக்கு பணம் நிரப்ப ரூ.50 லட்சம் வரை மட்டுமே கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே பணத்திற்கான உரிய ஆவணங்களை கொடுத்துவிட்டு திரும்ப பெற்றுக்கொள்ளும்படி, தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.