“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” – திருக்குறளை மேற்கோள் காட்டி மோடி பேச்சு!

 

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” – திருக்குறளை மேற்கோள் காட்டி மோடி பேச்சு!

கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்பித்து வருகிறார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, முடிவுற்ற சில பணிகளையும் தொடக்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்ற வந்த அவர், வணக்கம் என்று தமிழில் கூறி பேசத் தொடங்கினார்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” – திருக்குறளை மேற்கோள் காட்டி மோடி பேச்சு!

தொழில் நகரமான கோவைக்கு வந்ததில் மகிழ்ச்சி. பவானி சாகர் அணை விரிவாக்கத்தால் திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் அதிகம் பயன்பெறும். இதனால் 2 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசனம் கிடைக்கும். இந்த திட்டம் நமது விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். புதிய மின் உற்பத்தி திட்டத்தில் உற்பத்தியாக உள்ள மின்சாரத்தில் தமிழகம் 65% பெறும் என்று கூறினார்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” – திருக்குறளை மேற்கோள் காட்டி மோடி பேச்சு!

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் வளர்ச்சியில் முக்கிய தேவையான தடையற்ற மின்சாரத்துக்கு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் 65 சதவீதத்திற்கும் அதிகமான மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கடல்சார் வணிகம், துறைமுகம் சார்ந்த வளர்ச்சி குறித்த பாரம்பரியம் கொண்டது தமிழகம் என்று தெரிவித்த மோடி, வ.உ.சியின் தொலை நோக்கு பார்வை நமக்கு உத்வேகம் அளிக்கிறது என்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். இதனிடையே, ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்’ என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.