ரஜினிகாந்த்தை ‘தலைவா’ என புகழ்ந்த மோடி!

 

ரஜினிகாந்த்தை ‘தலைவா’ என புகழ்ந்த மோடி!

இந்திய சினிமாவில் அளித்த பங்களிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார். அமிதாபச்சன் ,வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர் ,கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்டோருக்கும் இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த்தை ‘தலைவா’ என புகழ்ந்த மோடி!

அரசியலில் களமிறங்கப் போவதாக பல ஆண்டுகளாக சொல்லி வந்த ரஜினிகாந்த், கட்சிக்கான பணியையும் ஆரம்பித்து விட்டு திடீரென பின்வாங்கினார். அவர் தனது உடல்நிலையை காரணம் காட்டினாலும், இதன் பின்புலத்தில் அரசியல் நகர்வுகள் ஏதோ இருப்பதாகவே தகவல்கள் கசிந்தன. இதற்கு முக்கிய காரணம் பாஜக தான் என்றும் சொல்லப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அவருக்கு திடீரென இந்த விருது அறிவிக்கப்பட்டது, பேசு பொருளானது. இதற்கு விளக்கம் அளித்த மத்திய அமைச்சர், இதன் பின்புலத்தில் தேர்தல் காரணம் ஏதுமில்லை என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த்தை ‘தலைவா’ என புகழ்ந்த மோடி!

இந்த நிலையில், தாதா சாகேப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிகாந்த்தை ‘தலைவா’ எனப் புகழ்ந்து பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தலைவாவுக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.