“மேகதாதுவில் அணை கட்ட மோடி நிச்சயம் சம்மதிக்க மாட்டார்” – பாஜக தலைவர் அண்ணாமலை

 

“மேகதாதுவில் அணை கட்ட  மோடி நிச்சயம் சம்மதிக்க மாட்டார்”  – பாஜக தலைவர் அண்ணாமலை

மேகதாது அணை கட்ட பிரதமர் மோடி நிச்சயம் சம்மதம் தெரிவிக்க மாட்டார் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

“மேகதாதுவில் அணை கட்ட  மோடி நிச்சயம் சம்மதிக்க மாட்டார்”  – பாஜக தலைவர் அண்ணாமலை

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் தமிழகத்திற்கு நீர் வரத்து குறையும் என்றும் இதனால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்றும் தமிழக அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுகுறித்து சமீபத்தில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின் காவிரியில் மேகதாது அணை கட்ட தடை விதிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதேசமயம் முன்னாள் முதல்வர் எடியூரப்பா காவிரியில் மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இப்படியாக தமிழகம் -கர்நாடகா இடையே மேகதாது அணை விவகாரத்தில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.இன்றைய சூழலில் புதிதாக கர்நாடக முதல்வராக பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை மேகதாது அணையை கட்டியே தீருவோம் என உறுதியாக தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேகதாது அணை கட்ட தமிழக பாஜக ஒருபோதும் ஆதரவு அளிக்காது என திட்டவட்டமாக கூறி வருகிறார்.

“மேகதாதுவில் அணை கட்ட  மோடி நிச்சயம் சம்மதிக்க மாட்டார்”  – பாஜக தலைவர் அண்ணாமலை

இந்நிலையில் மேகதாது அணை கட்ட கூடாது என்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் வருகின்ற 5ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இன்று சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 216வது நினைவு நாளையொட்டி சேலம் மாவட்டம் சங்ககிரியில் உள்ள அவரின் நினைவிடத்தில் தீரனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட பிரதமர் மோடி நிச்சயம் சம்மதம் தெரிவிக்க மாட்டார் ” என்று உறுதிப்பட தெரிவித்தார்.