கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 23ஆம் தேதி மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 23ஆம் தேதி மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியாவில் கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டிய நிலையில்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 752 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படாததால் உலக நாடுகள் திணறி வருகின்றன.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வரும் 23ஆம் தேதி மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். வரும் 23 ஆம் தேதி ஏழு மாநில முதலமைச்சர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட ஏழு மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாடு முழுவதும் செப்டம்பர் 30 ஆம் தேதி ஊரடங்கு முடிவடைய உள்ளதால் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு பணிகள் தொடர்பான பல விஷயங்கள் குறித்து விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.