ராமர் கோயில் பூமி பூஜைக்கு குடியரசு தலைவரையும் மோடி அழைத்திருக்க வேண்டும்.. மாயாவதி திடீர் குற்றச்சாட்டு

ராமர் கோயில் பூமி பூஜைக்கு குடியரசு தலைவரையும் மோடி அழைத்திருக்க வேண்டும்.. மாயாவதி திடீர் குற்றச்சாட்டு

அயோத்தியில் கடந்த 5ம் தேதியன்று ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அடிக்கல்லையும் நாட்டினார். இந்த விழாவுக்கு குடியரசு தலைவரையும் பிரதமர் மோடி அழைத்திருக்க வேண்டும் என தற்போது பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக மாயாவதி கூறியதாவது: தலித் சமுதாயத்தை சேர்ந்த குடியரசு தலைவருடன் பிரதமர் மோடி அயோத்திக்கு சென்று இருக்க வேண்டும்.

ராமர் கோயில் பூமி பூஜைக்கு குடியரசு தலைவரையும் மோடி அழைத்திருக்க வேண்டும்.. மாயாவதி திடீர் குற்றச்சாட்டு

ஆகஸ்ட் 5ம் தேதியன்று நடைபெற்ற பூமி பூஜைக்கு தங்களை அழைக்கவில்லை என சில தலித் துறவிகள் குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் தலித் துறவிகளை அழைக்கவில்லை ஆனால் அவர்கள் குடியரசு தலைவர் கோவிந்தை அழைத்து இருக்கலாம். அவர்கள் அந்த சுப நிகழ்ச்சிக்கு குடியரசு தலைவரை அழைத்து இருந்தால் சமுதாயத்துக்கு நல்ல செய்தி சென்று இருக்கும். இந்த விவகாரம் நம்பிக்கை சார்ந்தது அதனை அரசியலாக்கக்கூடாது. ராம ராஜ்ஜியம் பற்றி மட்டும் பேசினால் அது மக்களுக்கு உதவாது. அவர்கள் ராமரின் போதனையை அமல்படுத்த வேண்டும்.

ராமர் கோயில் பூமி பூஜைக்கு குடியரசு தலைவரையும் மோடி அழைத்திருக்க வேண்டும்.. மாயாவதி திடீர் குற்றச்சாட்டு

முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின்கீழ் உத்தர பிரதேசத்தில் காட்டாட்சி உள்ளது. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் குற்றம் அதிகரித்து வருகின்றன. உத்தர பிரதேசத்தில் ராமர் ஆட்சி இல்லை. தற்போது அவர்கள் பிராமணர்கள் வாக்குகளை குறிவைக்கிறார்கள், தேர்தல் வரும்போது பரசுராம் சிலை தொடர்பாக பேசுவார்கள். அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது அதனை செய்திருக்கலாம். பகுஜன் சமாஜ் அரசு அமைந்ததுடன் பரசுராம் ஜியின் மிகப்பெரிய சிலை நிறுவப்படும். அனைத்து சமுதாயத்தை சேர்ந்த துறவிகள், ஆன்மீக குருக்களின் சிலைகளை நாங்கள் நிறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.