இந்தியர்கள் யாரும் வெளியாட்கள் அல்ல, அவர்கள் பாரத மாதாவின் குழந்தைகள்.. மம்தாவுக்கு பதிலடி கொடுத்த மோடி

இந்தியர்கள் யாரும் வெளியாட்கள் அல்ல, அவர்கள் பாரத மாதாவின் குழந்தைகள்.. மம்தாவுக்கு பதிலடி கொடுத்த மோடி

மம்தா பானர்ஜி பா.ஜ.க.வினரை வெளியாட்கள் என்று கூறி வருவதற்கு, இந்தியர்கள் யாரும் வெளியாட்கள் அல்ல, அவர்கள் பாரத மாதாவின் குழந்தைகள் என்று பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 27ம் தேதி தொடங்கி மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நடைபெற தொகுதிகளில் அரசியல் கட்சிகள் அனல் பறக்க தேர்தல் பிரசாரம் செய்தன. பிரதமர் நரேந்திர மோடி நேற்று புர்பா மிடினிபுர் மாவட்டம் காந்தியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியர்கள் யாரும் வெளியாட்கள் அல்ல, அவர்கள் பாரத மாதாவின் குழந்தைகள்.. மம்தாவுக்கு பதிலடி கொடுத்த மோடி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம் சந்திர சட்டோபாத்யாய், ரவீந்திரநாத் தாகூர், சுபாஸ் சந்திரபோஸ் போன்ற சின்னங்களின் நிலம். இத்தகைய இடத்தில் யாரும் வெளியாட்கள் இல்லை. மேற்கு வங்கம் வந்தே மாதரம் வாயிலாக இந்திய மக்களை ஒன்றாக இணைத்து கொண்டு வந்தது. இந்த நிலத்தில் மம்தா சகோதரி வெளியாட்கள் குறித்து பேசுகிறார். இங்கு இந்தியர்கள் யாரும் வெளியாட்கள் அல்ல. அவர்கள் பாரத மாதாவின் குழந்தைகள்.

இந்தியர்கள் யாரும் வெளியாட்கள் அல்ல, அவர்கள் பாரத மாதாவின் குழந்தைகள்.. மம்தாவுக்கு பதிலடி கொடுத்த மோடி
ரவீந்திரநாத் தாகூர்

நாங்கள் சுற்றுலா பயணிகள் என்ற அழைக்கப்படுகிறோம். நாங்கள் வேடிக்கை செய்யப்படுகிறோம். நாங்கள் அவமதிக்கப்படுகிறோம். சகோதரி, ரவீந்திரநாத்தின் வங்காள மக்கள் யாரையும் அந்நியர்களாக கருதுவதில்லை. மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால், முதல்வர் இந்த மண்ணின் மைந்தனாக இருப்பார். நந்திகிராமையும், அதன் மக்களையும் நீங்கள் நாட்டின் முன் இழிவுபடுத்துகிறீர்கள். இதே நந்திகிராம்தான் உங்களுக்கு இவ்வளவு கொடுத்தது. நந்திகிராம் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள். உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.