கொரோனா பாதிப்பு: 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

 

கொரோனா பாதிப்பு: 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டிய நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 210 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப் படாததால் உலக நாடுகள் திணறி வருகின்றன.

கொரோனா பாதிப்பு: 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார். கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்கனவே தமிழகம் கோரியிருந்த நிதியை விடுவிக்க முதலமைச்சர் வலியுறுத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.