“மோடி தமிழர்களை மதிப்பதில்லை” – கோவையில் ராகுல் காந்தி பேச்சு!

 

“மோடி தமிழர்களை மதிப்பதில்லை” – கோவையில் ராகுல் காந்தி  பேச்சு!

தமிழகம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக உள்ளது என்று கோவையில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

“மோடி தமிழர்களை மதிப்பதில்லை” – கோவையில் ராகுல் காந்தி  பேச்சு!

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளார். முதற்கட்டமாக கோவை விமான நிலையம் வந்தடைந்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கோவை விமான நிலையம் அருகே மக்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, “தமிழகத்திற்கு வருவதற்கு எனக்கு எப்போதுமே எனக்கு விருப்பம் உண்டு. இந்தியாவில் குறிப்பிட்ட தத்துவத்தை கொண்டு வர போராடி கொண்டிருக்கிறோம். ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் போன்றவற்றை கொண்டுவர மோடி அரசு நினைக்கிறது.

“மோடி தமிழர்களை மதிப்பதில்லை” – கோவையில் ராகுல் காந்தி  பேச்சு!

மோடி தமிழர்களையோ, தமிழ் மொழியையோ, கலாச்சாரத்தையோ மதிப்பதில்லை. தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக பிரதமர் மோடி கருதுகிறார். இந்தியாவில் பல்வேறு விதமான கலாச்சாரம், வாழ்க்கைமுறை உள்ளது என்பதை நாம் நம்புகிறோம். இந்தியாவின் அமைப்பு மொழியில் எல்லா மொழிகளும் உள்ளது. அதை நாம் சமமாக கருதுகிறோம். நமக்கும் மோடிக்கும் இடையே உள்ள வேறுபாடு இதுதான். ஒரே மொழி, ஒரே காலச்சாரம் என்ற முயற்சியை எதிர்த்து நாம் போராட வேண்டியுள்ளது. மோடி அவரின் நண்பர்களுக்காக இருக்கிறார். மோடி இந்திய , தமிழக மக்களுக்கு சொந்தமானதை விற்க முயற்சி செய்கிறார். விவசாயிகளின் உரிமையை 3 வேளாண் சட்டங்கள் மூலம் பறிக்க நினைக்கிறார். நான் நினைக்கிறேன் தமிழ்நாடு தான் இந்தியாவிற்கு முன்னுதாரணமாக உள்ளது” என்றார்.