“ஹெச்.ராஜாவை கண்டிக்க மோடிக்கு தைரியம் இல்லை” கனிமொழி விளாசல்!!

 

“ஹெச்.ராஜாவை கண்டிக்க மோடிக்கு தைரியம் இல்லை” கனிமொழி விளாசல்!!

திமுக எம்.பி ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாய் குறித்தும், அவரது பிறப்பு குறித்தும் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி கண்ணீர் விட்டார். அத்துடன் இதுகுறித்து அதிமுக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து நேற்று விளக்கமளித்த ஆ. ராசா, தனிப்பட்ட முறையில் முதல்வரை விமர்சிக்கவில்லை. அவர் மனம் வேதனையடைந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

“ஹெச்.ராஜாவை கண்டிக்க மோடிக்கு தைரியம் இல்லை” கனிமொழி விளாசல்!!

இந்த சூழலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி , “ தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயை திமுக இழிவுப்படுத்தியுள்ளது . இதனை வன்மையாக கண்டிக்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் பெண்களை மேலும் வெளிப்படுத்துவார்கள். திமுகவும் காங்கிரசும் உங்களது தலைவர்களை கட்டுப்படுத்தி வையுங்கள்” என்று கூறினார்.

“ஹெச்.ராஜாவை கண்டிக்க மோடிக்கு தைரியம் இல்லை” கனிமொழி விளாசல்!!

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, உ.பி யில் ஹத்ராஸில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை மோடி கண்டித்தாரா? பொள்ளாச்சியில் அத்தனை
பெண்கள் பாதிக்கப்பட்டார்களே? அதில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துவிட்டதா? என பிரதமர் முதல்வரிடம் கேட்டாரா?பெண்களை கேவலமாக பேசிய ஹெச்.ராஜாவை கண்டிக்க மோடிக்கு தைரியம் இல்லை. திமுகவுக்கு மனசாட்சி உணர்வு இருந்ததால்தான் தனது பேச்சுக்கு ஆ.ராசா மன்னிப்பு கேட்டார் என காட்டமாக கூறினார்.