பிரதமர் பிறந்தநாள்: 70 அடி நீள கேக் வெட்டி பாஜகவினர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்!

 

பிரதமர் பிறந்தநாள்: 70 அடி நீள கேக் வெட்டி பாஜகவினர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்!

பிரதமர் மோடியின் 70 ஆவது பிறந்தநாளை ஒட்டி, சென்னையில் பாஜகவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மோடியின் பிறந்தநாளை சிறப்பாக்கும் விதமாக, நாடு முழுவதும் பாஜகவினர் கேக் வெட்டி ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். பாஜக தொண்டன், குஜராத் முதல்வர், நாட்டின் பிரதமர் என மாபெரும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு, அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் பழனிசாமி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

பிரதமர் பிறந்தநாள்: 70 அடி நீள கேக் வெட்டி பாஜகவினர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்!

இந்த நிலையில் பிரதமரின் 70ஆவது பிறந்தநாளை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில், சென்னையில் ஆட்டம் பாட்டத்துடன் பாஜகவினர் கொண்டாடினர். சார்ட் வண்டியில் சென்ற பாஜக தலைவர் முருகன், மோடிக்காக 70 அடி நீளத்தில் தயாரிக்கப்பட்ட கேக்கை வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார். பின்னர், பாஜகவினர் மேள தாளங்கள் முழங்க நடனமாடி மோடியின் பிறந்தநாளை கொண்டாடி, அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.