திருச்சி ரயில்வே ஜங்சனில் நவீன தானியங்கி தெர்மல் ஸ்கேனிங் கருவி!

திருச்சி ரயில்வே ஜங்சனில் நவீன தானியங்கி தெர்மல் ஸ்கேனிங் கருவி!

உடல் வெப்பத்தை அளவீடு செய்யும் வகையில் திருச்சி ரயில்வே ஜங்சனில் நவீன தானியங்கி தெர்மல் ஸ்கேனிங் கருவி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கொரோனோ வைரஸ் நோயையை தடுப்பதற்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உடல் வெப்பநிலையை அளவீடு செய்ய தெர்மல் ஸ்கிரீனிங் செய்யப்படுகிறது.

திருச்சி ரயில்வே ஜங்சனில் நவீன தானியங்கி தெர்மல் ஸ்கேனிங் கருவி!

திருச்சிராப்பள்ளி ரயில்வே ஜங்சனுக்கு வரும் பயணிகளுக்கு இதுவரை ரயில்வே ஊழியர்கள் தெர்மல் ஸ்கிரீனிங் செய்து வந்தனர்,இந்நிலையில் தற்போது பயணிகள் வரும் போது தானாகவே ஸ்கேன் செய்து உடல் வெப்பத்தை ஸ்கிரீனில் தெரியப்படுத்தும் வகையில் புதிய தானியங்கி தெர்மல் ஸ்கிரீனிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி ரயில்வே ஜங்சனில் நவீன தானியங்கி தெர்மல் ஸ்கேனிங் கருவி!

பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் விரைவாக தெர்மல் ஸ்கிரீனிங் செய்ய இது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 37 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் அதிக உடல் வெப்பநிலையுடன் பயணிகள் யாராவது கடந்தால் அலாரம் ஒலி உடனே எழுப்பும்.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பயணிகளிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.