‘அனிதா சம்பத்தை உசுப்பேத்தும் சனம் ஷெட்டி’.. கமெண்ட் அடிக்கும் சம்யுக்தா!

 

‘அனிதா சம்பத்தை உசுப்பேத்தும் சனம் ஷெட்டி’.. கமெண்ட் அடிக்கும் சம்யுக்தா!

சனம் ஷெட்டி அனிதா சம்பத்தை உசுப்பேத்தி விடுவது போல, இன்றைய நிகழ்ச்சிக்கான 3ஆவது புரோமோ வெளியாகியுள்ளது.

‘அனிதா சம்பத்தை உசுப்பேத்தும் சனம் ஷெட்டி’.. கமெண்ட் அடிக்கும் சம்யுக்தா!

பிக் பாஸ் வீட்டில் நேற்று, ஹவுஸ்மேட்ஸ் யாரை எதற்காக மிஸ் செய்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டும் என பிக்கி டாஸ்க் கொடுத்திருந்தார். அந்த டாஸ்க்கில் ஒருவர் பின் ஒருவராக கதையை சொல்ல, கடைசியில் வந்த அனிதா சம்பத் வழக்கம் போல வளவளவென்று பேசி ஹவுஸ்மேட்ஸை கடுப்பாக்கி விட்டார். என்ன டாஸ்க் கொடுத்தாங்க? இவங்க என்ன பேசிட்டு இருக்காங்க? என ஆஜித் கமெண்ட் அடிக்க, ரம்யா பாண்டியன், ஷிவானி, பாலா உள்ளிட்ட பலர் சென்டிமென்ட் டாஸ்க்கில் சிரித்து விட்டனர்.

‘அனிதா சம்பத்தை உசுப்பேத்தும் சனம் ஷெட்டி’.. கமெண்ட் அடிக்கும் சம்யுக்தா!

ஒரு கட்டத்தில் கடுப்பான சம்யுக்தா, ரொம்ப நீளமா போகுது சீக்கிரமா முடிச்சுக்கோங்க என அனிதா சம்பத்திடம் நேரடியாக சொல்லி விட்டார். இதனால் வழக்கம் போல அனிதா சம்பத், சம்யுக்தாவிடம் எனக்கு ஸ்பேஸ் கிடைக்கல..என்ன பேச விட மாட்டுறீங்க எனக்கூறி அழுது தனது கோபத்தை வெளிப்படுத்தினார். ஆனால் சம்யுக்தா சொன்னது சரி தான், எத்தனை முறை இதையே கேக்குறது என நெட்டிசன்கள் கமேண்ட் செய்தனர்.

‘அனிதா சம்பத்தை உசுப்பேத்தும் சனம் ஷெட்டி’.. கமெண்ட் அடிக்கும் சம்யுக்தா!

இந்த நிலையில், அனிதா சம்பத்தை பேச வேண்டாம் என சம்யுக்தா கூறியது தவறு என சனம் ஷெட்டி உசுப்பேத்தி விடுவது போல புரோமோ வெளியாகியுள்ளது. புரோமோவில், அனிதாவே சும்மா இருக்கா.. இந்த சனம் உட்கார்ந்து உசுப்பேத்தி விட்டுட்டு இருக்கா என சம்யுக்தா ஹவுஸ் மேட்ஸிடம் கூறுகிறார். வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கும் அனிதா, எல்லா பண்ணதை தான் நானும் செஞ்சேன்.. ஆனா என்ன மட்டும் பேச விடல என்று சொல்ல, யாரையும் பேச வேண்டாம்னு சொல்றதுக்கு நீங்க என்ன பிக் பாஸ் அசிஸ்டன்ட்டா? என சனம் ஷெட்டி சம்யுக்தாவை விமர்சிக்கிறார்.

‘அனிதா சம்பத்தை உசுப்பேத்தும் சனம் ஷெட்டி’.. கமெண்ட் அடிக்கும் சம்யுக்தா!

எல்லாத்தையும் ஜாலியாகவே எடுத்துக் கொள்ளும் சம்யுக்தா இதற்கும், சொன்னது எல்லாமே வேஸ்ட் ஆஃப் டைம். வேஸ்ட் ஆஃப் எனர்ஜி என கமெண்ட் அடிக்கிறார். இதனிடையே சனம், எல்லாருக்கும் இதை சொல்லி இருக்கணும்.. ஒருவருக்கு மட்டும் சொல்வது தவறு என சொல்ல, சம்யுக்தா கையெடுத்துக் கும்பிடுவது போல புரோமோ முடிகிறது.