பெண் ஊழியர்களுடன் சென்னையில் தொடங்கப்பட்ட ‘நடமாடும் டீக்கடை’!

 

பெண் ஊழியர்களுடன் சென்னையில் தொடங்கப்பட்ட ‘நடமாடும் டீக்கடை’!

இந்தியாவிலேயே முதன்முறையாக நடமாடும் டீக்கடையை ‘கில்லி சாய்’ என்ற அமல்படுத்தியது. ஆட்டோ மூலம் வீதி வீதியாக சென்று டீ மற்றும் ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தில் பெண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. சென்னை, பாண்டிச்சேரி, துபாய் என கிட்டத்தட்ட 23 இடங்களில் கில்லி சாய் செயல்பட்டு வருகிறதாம். இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் கில்லி சாய் டீக்கடையும், நடமாடும் ஆட்டோ டீக்கடையும் தொடங்கப்பட்டுள்ளது.

பெண் ஊழியர்களுடன் சென்னையில் தொடங்கப்பட்ட ‘நடமாடும் டீக்கடை’!

இதனை அமைச்சர்கள் ஜெயகுமார், எம்.சி.சம்பத் தொடக்கி வைத்தனர். கில்லி சாய் நிறுவனத்தின் இந்த திட்டத்திற்கு தமிழக அரசின் சில திட்டங்களும் உதவி புரிந்திருப்பதாக தெரிகிறது. அடுத்த வருடத்திற்குள் சுமார் 100 ஆட்டோக்களுடன் இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய ‘கில்லி சாய்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பெண் ஊழியர்களுடன் சென்னையில் தொடங்கப்பட்ட ‘நடமாடும் டீக்கடை’!

சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த டீக்கடையில் தயாரிக்கப்படும் ஸ்நாக்ஸ் அனைத்தும் மின்சார ஆட்டோக்களில் பூங்கா, விளையாட்டு மைதானங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் டீக்கடை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.