அதிமுக செயற்குழு கூட்டத்தில் செல்போனுக்கு தடை!

 

அதிமுக செயற்குழு கூட்டத்தில் செல்போனுக்கு தடை!

இன்று நடைபெறவிருக்கும் செயற்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. திமுகவில் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை என்றாலும், அதிமுகவில் முதல்வர் வேட்பாளர், சசிகலா விடுதலை என பெரும் பிரச்னை நிலவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ்ஸா? அல்லது ஓபிஎஸ்ஸா? என்ற குழப்பம் நீடிக்கும் நிலையில், அதிமுக உறுப்பினர்கள் இரு பிரிவினராக இருக்கின்றனர்.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் செல்போனுக்கு தடை!

அண்மையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தின் போது ஈபிஎஸ் ஆதரவாளர்கள் நிரந்தர முதல்வர் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வருங்கால முதல்வர் என்றும் கோஷம் எழுப்பி அதிமுக பிளவுண்டு இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டினர். இதற்கு ஒரு முற்றிப்புள்ளி வைப்பதற்காகவும், தேர்தல் கூட்டணி, கட்சியின் வளர்ச்சி பணி குறித்து விவாதிக்கவும் அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சுமார் 300 அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், அதிமுக செயற்குழு கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட யாரும் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.