மநீம இளம்வேட்பாளர் பத்மபிரியா தேர்தலுக்கு முன்னரே படைத்த சாதனை!

 

மநீம இளம்வேட்பாளர் பத்மபிரியா தேர்தலுக்கு முன்னரே படைத்த சாதனை!

மக்கள் நீதி மய்ய பெண் வேட்பாளர் பத்மபிரியாவின் பிரமாண பத்திரமே அதிக முறை பதிவிறக்கம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் இளம் பெண் வேட்பாளர் இவர் பத்மபிரியா. இவர் சமூக வலைதளங்களிலும் வெகுவாக அறியப்படுபவர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கையில் டார்ச் லைட்டுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

மநீம இளம்வேட்பாளர் பத்மபிரியா தேர்தலுக்கு முன்னரே படைத்த சாதனை!

இந்நிலையில் சென்னை மதுரவாயல் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியாவின் பிரமாண பத்திரம் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 15,563 முறை கமல்ஹாசனின் பிரமாணப் பத்திரத்தையும், 10,261 முறை சீமானின் சொத்து விவரங்களும் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரமாணப் பத்திரம் 6,879 முறையும், திமுக தலைவர் ஸ்டாலினின் சொத்து விவரங்கள் 4,351 முறையும், வானதி சீனிவாசனின் பிரமாண பத்திரம் 4,210 முறையும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.