துரோகம்… மகேந்திரன், பத்ம பிரியாவை வெளுத்து வாங்கிய மநீம நிர்வாகி!

 

துரோகம்… மகேந்திரன், பத்ம பிரியாவை வெளுத்து வாங்கிய மநீம நிர்வாகி!

யாரென்றே அடையாளம் தெரியாதவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்து அங்கீகாரம் பெற்றவுடன் பிற கட்சிகளுக்கு சென்றுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மெளரியா விமர்சித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து, அக்கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேற தொடங்கினர். குறிப்பாக மக்கள் நீதி மையம் துணைத் தலைவராக இருந்த மகேந்திரன் விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பத்மபிரியா உள்ளிட்ட பலரும் கட்சியிலிருந்து விலகி விட்டனர். அவர்கள் நேற்று முன்தினம் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

துரோகம்… மகேந்திரன், பத்ம பிரியாவை வெளுத்து வாங்கிய மநீம நிர்வாகி!

திமுகவில் இணைவதற்காகவே அவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகியதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மகேந்திரனும் பத்மபிரியாவும் திமுகவில் இணைந்தது குறித்து வள்ளுவர் கோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மையம் துணை தலைவர் மெளரியா , துரோகம் என்பதை கமல்ஹாசன் அன்றே குறிப்பிட்டு இருந்தார். யார் என்று அடையாளம் தெரியாத நிலையில் இருந்தவர்கள் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அடையாளத்தைப் பெற்று வியாபாரப் பொருளாக்கி பிற கட்சியில் இணைந்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்.

மேலும், தலைவர் கமலஹாசன் அவர்களுக்கு நன்றியுடன் இருக்கட்டும் என்றார். அப்போது மக்கள் நீதி மய்யம் பாழாய் போவதை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என கட்சித் தொண்டர்கள் கோஷமிட்டனர்.