எதிர்பார்ப்புகளை காட்டிலும் விஞ்சியது… மகிந்திரா நிறுவனத்தின் லாபம் ரூ.530 கோடி

எதிர்பார்ப்புகளை காட்டிலும் விஞ்சியது… மகிந்திரா நிறுவனத்தின் லாபம் ரூ.530 கோடி

மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் லாபமாக ரூ.530 கோடி ஈட்டியுள்ளது.

நம் நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மகிந்திரா அண்டு மகிந்திரா தனது டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் லாபமாக ரூ.530 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலண்டைக் காட்டிலும் 39.6 சதவீதம் அதிகமாகும்.

எதிர்பார்ப்புகளை காட்டிலும் விஞ்சியது… மகிந்திரா நிறுவனத்தின் லாபம் ரூ.530 கோடி
மகிந்திரா டிராக்டர்

2020 டிசம்பர் காலாண்டில் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.14,056 கோடி ஈட்டியுள்ளது. இது 2019 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 16 சதவீதம் அதிகமாகும். டிராக்டர் விற்பனை சிறப்பாக இருந்ததே இந்நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பு முக்கிய காரணம்.

எதிர்பார்ப்புகளை காட்டிலும் விஞ்சியது… மகிந்திரா நிறுவனத்தின் லாபம் ரூ.530 கோடி
மகிந்திரா கார் மாடல்கள்

மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் 2020 டிசம்பர் காலாண்டில் மொத்தம் 97,420 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாகும். அதேசமயம் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் வாகன வர்த்தக விற்பனை 7 சதவீதம் குறைந்து 1,15,272 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.