காலிங்கராயன் கால்வாய் சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வுசெய்த எம்.எல்.ஏ சரஸ்வதி!

 

காலிங்கராயன் கால்வாய் சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வுசெய்த  எம்.எல்.ஏ சரஸ்வதி!

ஈரோடு

மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்றுவரும் காலிங்கராயன் கால்வாய் சீரமைப்பு பணிகளை, பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காலிங்கராயன் கால்வாய், காலிங்கராயன் பாளையத்தில் தொடங்கி ஆவுடையார் பாறை வரை செல்கிறது. இந்த கால்வாய் பாசனம் மூலம் மஞ்சள், கரும்பு, வாழை, நெல், மரவள்ளி உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பொதுப் பணித்துறை சார்பில் மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வெண்டிபாளையம் முதல் ஆவுடையார் பாறை வரையிலான 40 மைல் தூரம் கால்வாயை சீரமைக்க ரூ.76 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

காலிங்கராயன் கால்வாய் சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வுசெய்த  எம்.எல்.ஏ சரஸ்வதி!

அதன் படி, இந்த பகுதியில் காலிங்கராயன் கால்வாயில் உள்ள 21 பாலங்கள், 513 மதகுகள், 25 குமுழி பாலங்கள், 2 ஆயிரத்து 485 மீட்டர் நீளம் தடுப்புச்சுவர் மற்றும் ஆயிரத்து 210 மீட்டர் கிளை கால்வாய்கள் உள்ளிட்டவை சீரமைப்பதற்கான பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. தற்போது சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில், மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சின்னியம்பாளையம், பாசூர் மாரியம்மன் கோவில், கருமாண்டம்பாளையம், ஆவுடையார் பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலிங்கராயன் கால்வாயில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகளை தொகுதி எம்.எல்.ஏ மருத்துவர் சி.சரஸ்வதி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மொடக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணி, பாஜக. மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம், கொடுமுடி ஒன்றிய தலைவர் சேகர், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.