எம்எல்ஏ கருணாஸ் திடீர் கைது!!

 

எம்எல்ஏ கருணாஸ் திடீர் கைது!!

முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாக எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்எல்ஏ கருணாஸ் திடீர் கைது!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று மதுரையில் பரப்புரை மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி நாளை காலை திருப்பத்தூரில் காலை 9.30 மணிக்கு செல்கிறார். பின்னர் சிவகங்கையில் காலை 10.15மணிக்கு பரப்புரை மேற்கொள்கிறார்.

எம்எல்ஏ கருணாஸ் திடீர் கைது!!

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் முதல்வருக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாக முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர்,எம்எல்ஏ கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் எம்எல்ஏ கருணாஸை சிவகங்கை காவல்துறை கைது செய்தது.கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த முக்குலத்தோர் புலிப்படை இந்த முறை சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கான தொகுதியை அதிமுக ஒதுக்கும் என எதிர்பார்த்து இருந்தது . ஆனால் கடைசிவரை முக்குலத்தோர் புலிப்படையை அதிமுக கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அமைப்பின் தலைவர் கருணாஸ் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் பின்னர் அவர் திமுகவுக்கு ஆதரவு அளித்தார். ஆனால் திமுகவும் ஆதரவு மட்டும் போதும் சீட் இல்லை என்று கையை விரித்ததால், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியது கருணாஸ் கட்சி. இருப்பினும் வன்னியர் இடஒதுக்கீடு கொடுத்து மற்ற சமூகத்தினரை வஞ்சகம் செய்த அதிமுகவை தோல்வியடைய செய்வதே தங்கள் நோக்கம் என வெளிப்படையாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.