“சசிகலாவை எளிதாக நினைத்து எடை போடக் கூடாது” – கருணாஸ் பரபரப்பு பேச்சு!

 

“சசிகலாவை எளிதாக நினைத்து எடை போடக் கூடாது” – கருணாஸ் பரபரப்பு பேச்சு!

சசிகலா தலைமைக்கு வந்துவிடக்கூடாது என மோடியும், அமித் ஷாவும் தெளிவாக இருந்தனர் என்று எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.

“சசிகலாவை எளிதாக நினைத்து எடை போடக் கூடாது” – கருணாஸ் பரபரப்பு பேச்சு!

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்எல்ஏவுமான கருணாஸ் நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” கூவத்தூரில் என்ன நடந்தது என்று அங்கிருந்த எல்லோருக்கும் தெரியும். சசிகலா குறித்து இன்று பேசுபவர்கள் அன்று என்ன பேசினார்கள் என்பது ஊடகங்களில் உள்ளது. பிரேமலதா விஜயகாந்த் கருத்து வரவேற்க கூடியது. பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என்பதும் அனைவருக்கும் தெரியும். தேவர் இனம் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற சமுதாய மக்கள் சிறப்பாக வாழவேண்டும் என நினைக்கும் முதல்வர் முக்குலத்தோர் சமூகமும் வாழ வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

“சசிகலாவை எளிதாக நினைத்து எடை போடக் கூடாது” – கருணாஸ் பரபரப்பு பேச்சு!

முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு அரசியல் அடையாளத்தை கொடுத்தவர் ஜெயலலிதா. அதற்கு உறுதுணையாக இருந்தவர் சசிகலா. அதனால்தான் இன்றுவரை அதிமுகவுடன் தோழமையுடன் இருக்கின்றோம் . இப்போது சசிகலாவை வேண்டாம் என்று கூறுபவர்கள் தான் அவரை பொதுச் செயலாளராக நியமித்தனர்.எத்தனை காலங்கள் வந்தாலும் உண்மை ஒருபோதும் மாறாது.

“சசிகலாவை எளிதாக நினைத்து எடை போடக் கூடாது” – கருணாஸ் பரபரப்பு பேச்சு!

அதிமுகவுக்கு பின் பாஜக இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. சசிகலா தலைமைக்கு வந்துவிடக்கூடாது என மோடியும், அமித் ஷாவும் தெளிவாக இருந்தனர். பிரதமர் மோடி வேறு ஒருவரை முதல்வராக கொண்டுவர நினைத்தார். ஆனால் அவரது விருப்பத்திற்கு மாறாக தமிழகத்தின் முதல்வரை தீர்மானம் செய்தவர் சசிகலா. இதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. ஜெயலலிதா, மம்தா பானர்ஜி முதல்வர் பதவியில் இருந்தனர். ஆனால் எந்த கட்சியிலும் இல்லாத ஒருவர் இப்பேர்ப்பட்ட காரியங்களை செய்ய முடியும் என்று உலகுக்கு நிரூபித்தவர் சசிகலா. சசிகலாவை எளிதாக நினைத்து எடை போடக் கூடாது” என்றார்.