ராகுகாலத்தில் பதவியேற்கும் மு.க.ஸ்டாலின்

 

ராகுகாலத்தில் பதவியேற்கும் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்த்தபடி, திமுக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. கூட்டணி அல்லாது திமுக வேட்பாளர்கள் 125 தொகுதிகளில் வெற்றி வாகை சூடினர். கூட்டணியுடன் சேர்த்து 159 இடங்களில் திமுக அமோக வெற்றிப்பெற்றது. இதனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் உதயசூரியன் உதயமாகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக வரும் 7ம் தேதி பதிவேற்கவுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிமையாக பதிவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

ராகுகாலத்தில் பதவியேற்கும் மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் மூடநம்பிக்கை மற்றும் கடவுள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் சற்றும் நம்பிக்கையில்லாத ஸ்டாலின், ராகுகாலத்தில்தான் பதவியேற்கபோவதாக தகவல்கள் உலாவருகின்றன. அதன்படி, இராகு காலம்: 10:30 – 12:00 (பதவியேற்பு 11:00), தேய்பிறை நாளில் மேற்கில் சூலம் உண்டாகும் நாளிலேயே ஸ்டாலின் பதவியேற்கவிருப்பதாக ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். அன்றைய தினம் ஆயில்யம்/மகம் ராசிக்கே சந்திராஷ்டம் என்றாலும், அதற்கு அடுத்த ராசியான பூரம் ராசியே ஸ்டாலினின் நட்சத்திரமாகும். இதன்மூலம் மூடநம்பிக்கைகளுக்கு ஸ்டாலின் முடக்குப்போட்டு, தனது வெற்றிப்பயணத்தை தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.