தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான் என்ற வகையில் நமது செயல்பாடு அமைந்திட வேண்டும்-ஸ்டாலின்

 

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான் என்ற வகையில் நமது செயல்பாடு அமைந்திட வேண்டும்-ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக முப்பெரும் விழா இன்று மாலை காணொலி மூலமாக நடைபெற்றது. இவ்விழாவில் திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு முப்பெரும் விழா விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பெரியார் விருது – மிசா மதிவாணனுக்கும், அண்ணா விருது – எல்.மூக்கையாவுக்கும், கலைஞர் விருது – கும்மிடிப்பூண்டி வேணுவுக்கும், பேராசிரியர் விருது – முபாரக் என்பவருக்கும், பாவேந்தர் விருது- வாசுகி ரமணனுக்கும் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான் என்ற வகையில் நமது செயல்பாடு அமைந்திட வேண்டும்-ஸ்டாலின்

முப்பெரும் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சி தான் என்கிற வகையில் நமது செயல்பாடு அமைந்திட வேண்டும். 9 மாவட்டங்களில் வருகிற‌ ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதன்பிறகு வருகிற நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக 100 சதவீதம் வெற்றி பெற்றாக வேண்டும். கோட்டையில் கையெழுத்திட்டு அறிவிக்கப்படும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர உள்ளாட்சி நிர்வாகத்தில் திமுகவினர் இடம் பிடிப்பது முக்கியம். ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் பலத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இனி வருகிற ஒவ்வொரு மாதங்களிலும் திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளது.

உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறோம் என நாட்டு மக்களிடம் வாக்கு கேட்டோம். நான்கு மாத ஆட்சியில் செய்து கொண்டிருக்கிறோம். சொன்ன வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுகிறோம். பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் குடும்பத்திற்கு வழங்கியது, நியாயவிலை கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறை சார்பில் லட்சக்கணக்கான கோரிக்கை மனுக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளிட்டவற்றை 100 நாட்களுக்குள் செய்து முடித்துள்ளோம். திமுக ஆட்சி சொன்னதை செய்யும் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறோம்” எனக் கூறினார்.