எஸ்பிபியின் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற வேண்டும்! முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

 

எஸ்பிபியின் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற வேண்டும்! முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவராக அரை நூற்றாண்டு காலம் புகழோடு விளங்கி பத்மஸ்ரீ- பத்மபூஷண் விருதுகள் பெற்ற எஸ்பிபியின் இறுதிப்பயணம் உலகெங்கிலும் வாழும் ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எஸ்பிபியின் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெற வேண்டும்! முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை

இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “தமிழர்களின் நெஞ்சில் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடிப் புகழ் பெற்று விளங்கி, மத்திய அரசின் பத்மஸ்ரீ – பத்மபூஷண் விருதுகள் பெற்ற மாபெரும் இசைக் கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெறத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்! எல்லைகள் கடந்து ரசிகர்களுக்கு இன்னிசை தந்த திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் மத்திய – மாநில அரசுகளாலும், புகழ்பெற்ற அமைப்புகளாலும் பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். உலகெங்கும் வாழும் அவரது ரசிகர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் மறைந்த திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.