ஒரே விமானத்தில் முதலமைச்சரும், மு.க.ஸ்டாலினும் பயணம்

 

ஒரே விமானத்தில் முதலமைச்சரும், மு.க.ஸ்டாலினும் பயணம்

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அக்டோபர் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும்.

ஆண்டுதோறும் இந்த விழாவின்போது அதிமுக சார்பில் தேவர் சிலைக்கு 13½ கிலோ எடையிலான தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்து வருகிறது. விழா நிறைவு பெற்ற பின்பு, தங்க கவசம் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு மதுரையில் உள்ள ‘பேங்க் ஆப் இந்தியா’வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும். இந்த தங்க கவசத்தை எடுக்கும் பொறுப்பாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தேவர் நினைவிட அறங்காவலர் ஆகியோர் உள்ளனர்.

ஒரே விமானத்தில் முதலமைச்சரும், மு.க.ஸ்டாலினும் பயணம்

இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் சிறப்பு விழாவிற்கு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஒரே விமானத்தில் மதுரைக்கு பயணம் மேற்கொண்டனர்.

வரவேற்பு அளிப்பதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காக மதுரை விமான நிலையத்திற்கு உள்ளே தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விமான நிலையம் வெளியே மட்டுமே வரவேற்பு அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு செய்து செய்யப்பட்டுள்ளது.