`கர்ஜித்த சிங்கம் இன்று இல்லையே?’- ஜெ.அன்பழகன் படத்திறப்பில் மு.க.ஸ்டாலின் கண்ணீர்

 

`கர்ஜித்த சிங்கம் இன்று இல்லையே?’- ஜெ.அன்பழகன் படத்திறப்பில் மு.க.ஸ்டாலின் கண்ணீர்

“சட்டமன்றத்தில் சிங்கம்போல் எழுந்து நின்று கர்ஜிப்பார். வாதத்தால் எல்லோரையும் அடித்து நொறுக்கிவிடுவார். அந்த அளவுக்கு ஆற்றல் பெற்றவர் ” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் பல்க பேசினார்.

`கர்ஜித்த சிங்கம் இன்று இல்லையே?’- ஜெ.அன்பழகன் படத்திறப்பில் மு.க.ஸ்டாலின் கண்ணீர்

கொரோனாவால் உயிரிழந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இன்று நடைபெற்றது. ஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேசுகையில், “எனது பக்கத்தில் இருந்து தினமும் செயல்பட்ட என் சகோதரன் அன்பழகனை படமாக பார்க்க வரும் என்று நிச்சயமாக நான் நினைத்து பார்க்கவில்லை. காலமெல்லாம் நம்மோடு இருந்து கட்சியை கம்பீரமாக்கி வாழ்ந்திருக்க வேண்டிய சகோதரன் நம்மையெல்லாம் ஏமாற்றி போய்விட்டார். சென்னைக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தி.மு.க.வுக்கே ஜெ.அன்பழகன் மறைவு பெரும் இழப்பு. தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்டுள்ள இழப்பு. பன்முக ஆற்றல் கொண்டவராக அன்பழகன் இருந்தார். கட்சிப் பணிகள், மக்கள் பணிகள் என்று எப்போதும் அவர் மூழ்கியே இருப்பார்.

கட்சி நிகழ்ச்சிகள், போராட்டங்களை பிரமாண்டமாக நடத்தியவர். சட்டமன்றத்தில் சிங்கம்போல் எழுந்து நின்று கர்ஜிப்பார். வாதத்தால் எல்லோரையும் அடித்து நொறுக்கிவிடுவார். அந்த அளவுக்கு ஆற்றல் பெற்றவர். ஒரு மாவட்ட செயலாளர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்து நடந்து கொண்டது மட்டுமல்ல, ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல, ஒரு சகோதரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக இருந்தவர் அன்பழகன். மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக பேசக் கூடியவர். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார். சரி என்றால் உடனே பாராட்டுவார். தவறு என்றால் உடனே சுட்டிக்காட்டுவார். தயங்க மாட்டார். நமக்கென்ன எப்படியாவது போகட்டும் என்று விட்டுவிட மாட்டார். ஒவ்வொரு நாளும் கட்சி தம்மால் வளர வேண்டும் என்று செயல்பட்டவர்.

`கர்ஜித்த சிங்கம் இன்று இல்லையே?’- ஜெ.அன்பழகன் படத்திறப்பில் மு.க.ஸ்டாலின் கண்ணீர்

அவரது உடல்நிலை என்பது அனைவருக்கும் தெரியும். 1996ம் ஆண்டு லண்டன் சென்று மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்துக் கொண்டு தமிழகத்துக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை நாள் வரவேற்றேன். வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லவில்லை. தலைவரை (கருணாநிதி) பார்க்க வேண்டும் என்று சொன்னார். நானும் சொன்னேன். தலைவர் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறார் என்று. தலைவர் அவரை ஒரு மகனைப் போல கட்டிப்பிடித்தார். ஆனால் இன்று தலைவரும் இல்லை, அன்பழகனும் இல்லை. இருவரும் அடுத்தடுத்து நம்மை விட்டு மறைந்துவிட்டார்கள். கலைஞரை மேடையில் வைத்துவிட்டே, அன்பழகன் பலமுறை பேசியிருக்கிறார். “தலைவர் அவர்களே நான் போனஸ் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னுடைய உடல்நிலைப் பற்றி அனைவருக்கும் தெரியும். என்னுடைய வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் முடியலாம்.

`கர்ஜித்த சிங்கம் இன்று இல்லையே?’- ஜெ.அன்பழகன் படத்திறப்பில் மு.க.ஸ்டாலின் கண்ணீர்

அப்படி உயிர் போகும் நேரத்தில் தலைவரின் கண்ணீர் என் மேல் வந்து விழணும்” என்று அன்பழகன் பேசினார். அந்த உணர்ச்சிகரமான உரையை கேட்டு அனைவரும் கைத்தட்டினாங்க. அடுத்து பேசிய கலைஞர் என்ன பேசினார் தெரியுமா? “நீங்கள் அனைவரும் கைத்தட்டுனீங்க. அன்பழகன் சொன்னபோது என்னுடைய மனசு என்ன பாடுபட்டிருக்கும் என்று நினைத்து பார்த்தீர்களா?” என்று சொன்னார். அன்பழகன் குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வேன் என்று தெரியவில்லை. எனக்கு நானே எப்படி ஆறுதல் சொல்லிக் கொள்வது. கொரேனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்யாமல் அநாதைகள் போல கைவிட்டுவிட்டது. இதனால்தான் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை திமுக கையில் எடுத்தது. அதன் மூலமாக நாம் பல உதவிகளை செய்திருக்கிறோம். இந்த செயல் திட்டங்களை முன்னின்றி செயல்படுத்திய கழக வீரன்தான் அன்பழகன். அவரது உடல் நிலை குறித்து பலமுறை அவரிடம் சொன்னேன். நீங்கள் ரொம்ப அலைக்கூடாது. வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனியுங்கள் என்று காலை, மாலையில் பேசுவேன். நான் பேசாவிட்டாலும் அவரே பேசுவார்.

`கர்ஜித்த சிங்கம் இன்று இல்லையே?’- ஜெ.அன்பழகன் படத்திறப்பில் மு.க.ஸ்டாலின் கண்ணீர்

அப்போது, வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து பேசினார். நான் அவரிடம், நீங்கள் ஏன் போறீங்க. உத்தரவு போட்டால் கட்சி நிர்வாகிகள் செய்வார்கள் என்று சொல்வேன். அப்போது, நாங்க போறோம். நீங்க போகாதீங்க என்று என்னிடம் சொல்வார். கொரோனாவில் இருந்து மக்களை காக்க போராடியவர் இன்று கொரோனாவாலே பலியாகி இருக்கிறார். கட்சியை பொறுத்தவரையிலே அவர் ஒரு தொண்டன். அதிக பலத்தோடு வேங்கையால் வலம் வந்தவர் அன்பழகன். உடல் நிலை சரியில்லை என்று நேரத்தில்கூட கலைஞர் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு மருத்துவமனைக்கு சென்றவர். கட்சி மீதும் கலைஞர் மீதும் அவர் வைத்திருந்த ஆதாரம் இதுதான். மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டது முதல் நான் நினைவில்லாமல் இருந்தேன். மருத்துவர்களிடம் பேசிக்கொண்டே இருந்தேன். அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தோம். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. நம்மை மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார்” என்று உருக்கமாக பேசினார்.