எந்த ஹீரோ பிடிக்கும்?… ஒரே பதிலில் அதகளம் செய்த ஸ்டாலின்… அசந்துபோன கேள்வியாளர்கள்!

 

எந்த ஹீரோ பிடிக்கும்?… ஒரே பதிலில் அதகளம் செய்த ஸ்டாலின்… அசந்துபோன கேள்வியாளர்கள்!

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்துவருகிறார். பிரச்சாரத்திற்கு நடுவே, தனியார் செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் ஸ்டாலினுடன் விவாதம் செய்ய ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஸ்டாலின் செய்வாரா என்ற வாசகத்தை முன்வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இளைஞர்களுடன் ஸ்டாலின் உரையாடினார். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வீர்கள், என்ன மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறீர்கள் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ஸ்டாலின்.

எந்த ஹீரோ பிடிக்கும்?… ஒரே பதிலில் அதகளம் செய்த ஸ்டாலின்… அசந்துபோன கேள்வியாளர்கள்!

அரசியல் தவிர்த்த பெர்சனலான கேள்விகளும் ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அப்போது ஒரு பெண், “நீங்க ஒரு அரசியல் தலைவர். உங்களுக்கு படம் பார்க்க நேரமே இருக்காது. அப்படியே பார்த்தா எந்தப் படம் பாப்பீங்க? யார பிடிக்கும்” என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “பொதுவா நான் சினிமா அப்பப்போ பார்ப்பேன். நல்ல சினிமா, தரமான சினிமானா கட்டாயம் பார்ப்பேன்.

எனக்கு பெர்சனலா ஸ்டைல் நடிகர்னா ரஜினிய பிடிக்கும். இளைஞர்களைக் கவரும் வகையில நடிக்கிற விஜய பிடிக்கும். நவரசம் கலந்த நடிப்ப வெளிப்படுத்துற அஜித்த பிடிக்கும்” என்றார். இதைக் கேட்டு அரங்கில் இருந்தவர்கள் கைதட்டி வரவேற்றனர். ஒரே பதிலில் மூன்று உச்ச நடிகர்களையும் பாராட்டி அவர்களின் ரசிகர்களை ஸ்டாலின் கவர்ந்துவிட்டார் என பலரும் கூறிவருகின்றனர்.