மு.க.ஸ்டாலின் Vs சீமான்: ஒரே தொகுதியில் மோதினால் என்னவாகும்?

 

மு.க.ஸ்டாலின் Vs சீமான்: ஒரே தொகுதியில் மோதினால் என்னவாகும்?

அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடக்க விருக்கும் சட்டமன்ற தேர்தலில் பல சுவாரஸ்யங்கள் நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. அதேபோல, அதிமுகவில் பாஜக, தேமுதிக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

இவை தவிர சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி. கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யமும் இருக்கின்றன. இதில் சில வாரங்களுக்கு முன், சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்” என்று கூறியிருந்தார்.

மு.க.ஸ்டாலின் Vs சீமான்: ஒரே தொகுதியில் மோதினால் என்னவாகும்?

இடையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று அறிவிப்பு வந்ததும், மு.க.ஸ்டாலின் என் பங்காளி என்று பல்டி அடித்தார். தற்போது ரஜினியின் அரசியல் வருகை இல்லை என்றானதும், மீண்டும் பழையபடி, “மு.க.ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து நான் போட்டிவேன். அவர் கருணாநிதி மகன். நான் பிரபாகரன் பிள்ளை. யார் வெல்கிறார்கள் என்று பார்ப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.

இது விளையாட்டாகச் சொல்லப்பட்டது என்று ஒதுக்க முடியாது. ஏனெனில், இரண்டு முறை இதை சீமான் வலியுறுத்தியுள்ளார். ஒருவேளை அப்படி மு.க.ஸ்டாலின் Vs சீமான் என்று ஒரே தொகுதியில் போட்டி அமைந்துவிட்டால் என்னவாகும்?

மு.க.ஸ்டாலின் Vs சீமான்: ஒரே தொகுதியில் மோதினால் என்னவாகும்?

தமிழகத்தில் ஒரு கட்சியின் தலைவரை எதிர்த்து, மற்றொரு கட்சியின் தலைவர் இதுவரை போட்டியிட்டது இல்லை. அது காமராஜர் காலம் தொட்டு இப்போது வரை அதுதான் நிலை.

சென்ற தேர்தலில்கூட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை, ஜெயலலிதாவுக்கு எதிராக நிற்கச் சொல்லி உசுப்பேத்தினார்கள். ஆனால், அவர் நாகரிகமாக மறுத்துவிட்டார்.

இப்போது மு.க.ஸ்டாலின் Vs சீமான் என்ற நிலை வந்தால், இரு கட்சி உறுப்பினர்கள் வரை பகை வளரும். இரு தரப்பிலும் அனைத்துத் தொகுதிகளிலும் இரு கட்சியினரும் மோதிக்கொள்வார்கள். இது ஆரோக்கியமான அரசியலுக்கு இட்டுச் செல்லாது. நிரந்த பகை போல திமுக vs நாம் தமிழர் கட்சியினர் மாறிவிடுவர்.

மு.க.ஸ்டாலின் Vs சீமான்: ஒரே தொகுதியில் மோதினால் என்னவாகும்?

ஒருவேளை சீமானின் நோக்கம் அதுதான் என்றும் சிலர் கணிக்கிறார்கள். ஏனெனில், தனக்கு வலிமையான எதிரியைச் சுட்டுவதன்மூலம் தம்மைப் பற்றிய பேச்சும் அடிபடும் என்று நினைக்கலாம். பொதுமைய்ய நீரோட்டத்தில் தம்மையும் பொருட்படுத்தலாம் என்று சீமான் நினைக்கலாம்.

ஏனெனில், கருணாநிதியோ, மு.க.ஸ்டாலினோ, ஜெயலலிதாவோ நேரடியாக சீமானின் கருத்துகளுக்குப் பதில் சொன்னது இல்லை. அதனால், இப்படி மோதுவதன் மூலம், தம் மீது கூடுதல் வெளிச்சம் விழும் என நினைத்திருக்கலாம்.

மு.க.ஸ்டாலின் Vs சீமான் எனும் அமையும்போது சீமானுக்கு எப்போதுமே திமுக எதிர்ப்பு வாக்குகள் கிடைத்துவிடும். இதனால், அதிமுகவுக்குச் செல்லும் திமுக எதிர்ப்பு வாக்குகள் சீமானுக்கும் ஒரு பங்கு சிதறும். அதனால், ஸ்டாலினுக்கே நல்ல வாய்ப்பாக அமையும்.

மு.க.ஸ்டாலின் Vs சீமான்: ஒரே தொகுதியில் மோதினால் என்னவாகும்?

ஒரு தொகுதியில் இரு கட்சி தலைவர்கள் மோதினால், ஒரு கட்சியின் தலைவரே தோற்க வேண்டிய சூழல் ஏற்படும். அது அந்தக் கட்சி உறுப்பினர்களுக்கு பெரும் சோர்வைத் தரும்.
மு.க.ஸ்டாலின் Vs சீமான் எனும் பார்க்கையில் ஸ்டாலின் வெல்லவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏனெனில், முந்தைய சட்டமன்றத் தேர்தலில் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். அதில் அவர் வாங்கியது மிகவும் சொற்பமான வாக்குகளே. வெற்றிபெற்ற அதிமுகவின் எம்.சி.சம்பத் 70.922 வாக்குகளும், திமுகவின் இள புகழேந்தி 46,509 வாக்குகளும், தமாகாவின் சந்திரசேகர்ன் 16,905 வாக்குகளும், பாமகவின் தாமரைகண்ணன் 16905 வாக்குகளும் பெற்றனர். இந்த நான்கு பேரையும் விட குறைவாக 12,497 வாக்குகள் மட்டுமே சீமான் பெற்றிருந்தார்.

மு.க.ஸ்டாலின் Vs சீமான்: ஒரே தொகுதியில் மோதினால் என்னவாகும்?

சென்ற தேர்தலில் கூட்டணி பிரிந்து, மூன்றாம் அணி இருந்துமே சீமானால் இவ்வளவுதான் பெற முடிந்தது. இப்போது திமுகவில் வலுவான கட்சிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில் சீமானுக்கு பெரிய அளவில் வாக்குகள் விழ வாய்ப்புகள் குறைவு. மு.க.ஸ்டாலினோ சென்ற சட்டமன்ற தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

வேட்புமனு தாக்கல் செய்ததுமே முடிவு தெரிந்துவிடும். பொதுமக்களுக்கு மட்டுமல்ல, நாம் தமிழர் கட்சியினருக்குமே. அது மற்ற இடங்களில் பணியாற்றுவதிலும் சோர்வைத் தரும்.