“உயிர் நீத்த காவல்துறையினர் அனைவருக்கும் வீரவணக்கம்” – மு.க ஸ்டாலின் பதிவு!

 

“உயிர் நீத்த காவல்துறையினர் அனைவருக்கும் வீரவணக்கம்” – மு.க ஸ்டாலின் பதிவு!

இன்று காவலர் வீர வணக்கம் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாட்டுக்காக வீர தீர செயல்களில் ஈடுபட்டு உயிர் நீத்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில், ஆண்டுதோறும் அக்.21ம் தேதி நாடு முழுவதும் காவலர் நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1959ம் ஆண்டு அக்.21ம் தேதி லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில், 10க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அந்த தாக்குதலின் போது மறைந்த வீரர்களின் நினைவாகவே, பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்காக வீரவணக்கம் தினம் அனுசரிக்கப்படுகிறது.

“உயிர் நீத்த காவல்துறையினர் அனைவருக்கும் வீரவணக்கம்” – மு.க ஸ்டாலின் பதிவு!

இந்த நிலையில், இன்று காவலர் வீரவணக்கம் தினம் அனுசரிக்கப்படுவதை ஒட்டி திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவல்துறையில் வீரமரணமடைந்தவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்று #PoliceCommemorationDay அனுசரிக்கப்படுகிறது. நமது பாதுகாப்புக்காக, அமைதியை நிலைநாட்டிட, குறிப்பாக கொரோனா பேரிடர் காலத்தில் சீர்மிகு பணியாற்றி உயிர் நீத்த தியாக சீலர்களான காவல்துறையினர் அனைவருக்கும் வீரவணக்கம்!” என குறிப்பிட்டுள்ளார்.