‘உரிய அழுத்தம் தரவில்லை’..நீட் எதிர்ப்பு வெறும் நாடகம் : மு.க ஸ்டாலின்

 

‘உரிய அழுத்தம் தரவில்லை’..நீட் எதிர்ப்பு வெறும் நாடகம் : மு.க ஸ்டாலின்

நீட் தேர்வுக்கு அரசு எதிர்ப்பு தெரிவிப்பதெல்லாம் வெறும் நாடகம் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செப்.16 ஆம் தேதி வரை நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. அவையின் தொடக்கத்தில், உயிரிழந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நினைவேற்றப்பட்டது. அப்போது, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

‘உரிய அழுத்தம் தரவில்லை’..நீட் எதிர்ப்பு வெறும் நாடகம் : மு.க ஸ்டாலின்

இதனிடையே சட்டப்பேரவைக்கு ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ என்ற வாசகத்துடன் கூடிய மாஸ்க் அணிந்து வந்த திமுக தலைவர் மற்றும் திமுக எம்எல்ஏக்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சட்டப்பேரவையில் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில், அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வெறும் நாடகம் என முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘உரிய அழுத்தம் தரவில்லை’..நீட் எதிர்ப்பு வெறும் நாடகம் : மு.க ஸ்டாலின்

அதில், “#NEET, #EIA, #COVID19 பற்றி பேரவையில் விவாதிக்க வேண்டும் என கோரியிருக்கிறோம். அதிமுக அரசின் #NEET எதிர்ப்பு வெறும் நாடகம்! அமைச்சர்களோ, முதலமைச்சரோ பிரதமரை இதுவரை நேரில் சந்தித்து உரிய அழுத்தம் தரவில்லை! எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மத்திய பாஜக அரசின் அடிமை அரசாகவே இருக்கிறது!” என குறிப்பிட்டுள்ளார்.