நோட்டாவை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம்- மு.க. ஸ்டாலின் 

 

நோட்டாவை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம்- மு.க. ஸ்டாலின் 

கொரோனா பொதுமுடக்கத்தை கருத்தில் கொண்டு, மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 30 சதவீத பாடங்கள் குறைக்கப்படுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்தது. சிபிஎஸ்இ மாணவர்களுக்கான ஒன்பது மற்றும் 10-ஆம் வகுப்பு தமிழ்ப் பாடப்புத்தகத்தில் இருந்து “தந்தை பெரியார் சிந்தனைகள், மா.பொ.சி.யின் எல்லைப் போராட்ட வரலாறு, ராஜராஜசோழனின் மெய்கீர்த்தி” போன்ற பாடங்களும், தமிழகப் பெண்களின் சிறப்புகளை விளக்கும் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே’ எனும் பாடமும், ராணுவத்தில் தமிழர் பங்கு என்ற பாடமும் நீக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இராணுவ உடையில் திருக்குறளை சுட்டும் பிரதமர் ‘ராணுவத்தில் தமிழர் பங்கு’ என்ற #CBSE பாடத்தை நீக்குகிறார். தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி-ன் எல்லைப் போராட்டம் ஆகியவற்றை மீண்டும் இணைக்க மறுத்தால் இம்மண்ணில் #NOTA வை தாண்டுவதைக் கூட பாஜக மறந்துவிடலாம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.